• Sep 17 2024

மின்சார சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் அவசரம் வேண்டாம்...! சபையில் சஜித் வேண்டுகோள்...!

Sharmi / Jun 4th 2024, 1:50 pm
image

Advertisement

மின்சார சட்டமூலத்தை அவசரமாக பாராளுமன்றில் நிறைவேற்றுவதை தவிர்த்து அதிலுள்ள குறைகளை தீர்க்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றையதினம்(04)  இடம்பெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மின்சார சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வாசித்ததன் மூலம் குறித்த சட்டத்தில் பாரிய பிரச்சினைகள் இருப்பதாக அறிந்து கொண்டோம்.

அதனாலேயே மூன்றில் இரண்டு பெரும்பாண்மை அதிகாரத்தால் இங்கு சில பிரிவுகள் நிறைவேற்றப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசாங்கத்திற்கு அந்த அதிகாரம் இல்லை.

எனவே, அதை அவசர அவசரமாக வியாழக்கிழமை கொண்டுவராது ,அதில் இருக்கும் குறைகளை ஆராய்ந்து உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகளை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து எதிர்காலத்தில் எதிர்காலத்தில் அது தொடர்பில் சரியான தீர்ப்பை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை மின்சார சட்டத்தை கொண்டுவந்து முழுமையாக அதனை குழப்பிக் கொள்ளாது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கள், பரிந்துரைகள்  என்பவற்றை சரியாக புரிந்துகொண்டு நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்ப குறைந்த ஒரு அலகிற்கான கட்டணத்தில் மின்சார கட்டணங்களை அறவிடுவது தொடர்பில் மின்சார சபைக்கும் நஷ்டம் ஏற்படாத வகையில் சாத்தியமான ஒரு எண்ணக்கருவை கொண்டு சிறந்த திட்டமொன்றை வகுப்பதற்காக இதனை ஆராய்வோம்.

எனவே, மின்சார சட்டத்திலுள்ள குறைகளை தீர்த்து இந்த விடயங்களை முன்கொண்டு செல்வோம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மின்சார சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் அவசரம் வேண்டாம். சபையில் சஜித் வேண்டுகோள். மின்சார சட்டமூலத்தை அவசரமாக பாராளுமன்றில் நிறைவேற்றுவதை தவிர்த்து அதிலுள்ள குறைகளை தீர்க்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.இன்றையதினம்(04)  இடம்பெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,மின்சார சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வாசித்ததன் மூலம் குறித்த சட்டத்தில் பாரிய பிரச்சினைகள் இருப்பதாக அறிந்து கொண்டோம்.அதனாலேயே மூன்றில் இரண்டு பெரும்பாண்மை அதிகாரத்தால் இங்கு சில பிரிவுகள் நிறைவேற்றப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.ஆனால் அரசாங்கத்திற்கு அந்த அதிகாரம் இல்லை.எனவே, அதை அவசர அவசரமாக வியாழக்கிழமை கொண்டுவராது ,அதில் இருக்கும் குறைகளை ஆராய்ந்து உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகளை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து எதிர்காலத்தில் எதிர்காலத்தில் அது தொடர்பில் சரியான தீர்ப்பை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.அதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை மின்சார சட்டத்தை கொண்டுவந்து முழுமையாக அதனை குழப்பிக் கொள்ளாது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கள், பரிந்துரைகள்  என்பவற்றை சரியாக புரிந்துகொண்டு நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்ப குறைந்த ஒரு அலகிற்கான கட்டணத்தில் மின்சார கட்டணங்களை அறவிடுவது தொடர்பில் மின்சார சபைக்கும் நஷ்டம் ஏற்படாத வகையில் சாத்தியமான ஒரு எண்ணக்கருவை கொண்டு சிறந்த திட்டமொன்றை வகுப்பதற்காக இதனை ஆராய்வோம்.எனவே, மின்சார சட்டத்திலுள்ள குறைகளை தீர்த்து இந்த விடயங்களை முன்கொண்டு செல்வோம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement