அல்லைப்பிட்டியில் நேற்றுமுன்தினம் ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது சிறுவனை சுட்டுப்படுகொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் வீதியில் உறவுகள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்பின்னர் சிறுவனின் சடலத்தைப் புதைப்பதற்காக சங்கரத்தை சந்தி வழியாக கொண்டு சென்றனர்.
அங்கு சங்கரத்தை சந்தியில் வட்டுக்கோட்டை பொலிஸார் பெருமளவில் திரண்டுள்ளனர். இதனை அவதானித்த உறவினர்கள், கொந்தளித்துக்கொண்டு பொலிஸாரை நோக்கிச் சென்றனர்.
இதன்போது பொலிஸாருக்கும் சிறுவனின் உயவினர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் அவர்களை மற்றைய உறவினர்கள் அழைத்துச்சென்றனர்.
இதனால் குறித்த பகுதியில் சற்றுநேரம் பதற்றநிலை தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்களையும் சுடுங்கடா - சிறுவனின் உறவுகள் கொந்தளிப்பு; சங்கரத்தையில் திரண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் எங்களையும் சுடுங்கடா - சிறுவனின் உறவுகள் கொந்தளிப்பு சங்கரத்தையில் திரண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன் வட்டுக்கோட்டை பொலிஸாருடன் உறவினர்கள் முரண்பட்டுள்ளனர்.அல்லைப்பிட்டியில் நேற்றுமுன்தினம் ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது சிறுவனை சுட்டுப்படுகொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் வீதியில் உறவுகள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்பின்னர் சிறுவனின் சடலத்தைப் புதைப்பதற்காக சங்கரத்தை சந்தி வழியாக கொண்டு சென்றனர். அங்கு சங்கரத்தை சந்தியில் வட்டுக்கோட்டை பொலிஸார் பெருமளவில் திரண்டுள்ளனர். இதனை அவதானித்த உறவினர்கள், கொந்தளித்துக்கொண்டு பொலிஸாரை நோக்கிச் சென்றனர். எங்களையும் சுடுங்கடா, எங்கட பிள்ளையை நாசமாக்கி விட்டீர்களடா என்று கதறி அழுது பொலிஸாருக்கு மண்ணை அள்ளிப்போட்டு தள்ளிவிட்டுள்ளனர். இதன்போது பொலிஸாருக்கும் சிறுவனின் உயவினர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் அவர்களை மற்றைய உறவினர்கள் அழைத்துச்சென்றனர். இதனால் குறித்த பகுதியில் சற்றுநேரம் பதற்றநிலை தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.