• Nov 25 2024

விவசாயக் கடனை நிறுத்தாதீர்கள் - தேர்தல் ஆணைக்குழுவிடம் மனு கையளிப்பு..!

Sharmi / Oct 1st 2024, 8:56 pm
image

தேர்தல் ஆணைக்குழுவினால் உர மானியத்தை நிறுத்துதல் மற்றும் இலவச MOP உரம் விநியோகம் தொடர்பாக விவசாயிகள் சங்கம் மற்றும் ஹரித தொலைக்காட்சி சேவை ஆகியோர் இணைந்து தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை கையளித்தனர்.

இதன்போது  சட்டத்தரணி நுவான் ஜெயவர்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுக்க இன்று வந்துள்ளோம்.  ஹரித டிவி ஒரு சமூக சேனல்.  பதினைந்தாயிரம் ரூபாயாக இருந்த பருவத்திற்கான உர மானியத்தை 25000 ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

ஹரித டிவி இயக்குநர் சஞ்சய் போல் கருத்து தெரிவிக்கையில்,

உர மானியம் வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது. மக்கள் சேனலான ஹரித டிவி இன்று தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது. தடையை தடுத்து மீண்டும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


விவசாயக் கடனை நிறுத்தாதீர்கள் - தேர்தல் ஆணைக்குழுவிடம் மனு கையளிப்பு. தேர்தல் ஆணைக்குழுவினால் உர மானியத்தை நிறுத்துதல் மற்றும் இலவச MOP உரம் விநியோகம் தொடர்பாக விவசாயிகள் சங்கம் மற்றும் ஹரித தொலைக்காட்சி சேவை ஆகியோர் இணைந்து தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை கையளித்தனர்.இதன்போது  சட்டத்தரணி நுவான் ஜெயவர்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுக்க இன்று வந்துள்ளோம்.  ஹரித டிவி ஒரு சமூக சேனல்.  பதினைந்தாயிரம் ரூபாயாக இருந்த பருவத்திற்கான உர மானியத்தை 25000 ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.ஹரித டிவி இயக்குநர் சஞ்சய் போல் கருத்து தெரிவிக்கையில்,உர மானியம் வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது. மக்கள் சேனலான ஹரித டிவி இன்று தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது. தடையை தடுத்து மீண்டும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement