• May 21 2024

நினைவேந்தல்களை சுயநல மேன்மைக்காகவோ, கட்சி அரசியலுக்காகவோ பயன்படுத்தாதீர்கள்...! யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் வேண்டுகோள்...!samugammedia

Sharmi / Sep 22nd 2023, 1:11 pm
image

Advertisement

நினைவேந்தல்களை சுயநல மேன்மைக்காகவோ, கட்சி அரசியலுக்கோ, இனவெறியை அல்லது மதவெறியை வெளிக்காட்டவோ பாவிக்கக்கூடாது என யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருகோணமலையில்  திலீபனின் நினைவேந்தல் ஊர்தி தாக்கப்பட்ட  சம்பவத்திற்கு கண்டனம்  தெரிவித்தும் மற்றும் திலீபனின் நினைவேந்தல் தொடர்பிலும் யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் இன்று(22)  வெளியிட்டுள்ள  ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த ஞாயிற்றுக்கிழமை(17) திருகோணமலையில் நடைபெற்ற சம்பவம், நினைவேந்தலை உரிய மாண்புடன், நினைவேந்தலாக நோக்க முடியாத நிலையில் நாம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது மிகுந்த வேதனையை தருகிறது. இதனை யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் கண்டிக்கின்றது.

இலங்கையின் பன்மைச் சூழ்நிலையில் அனைவரையும் மனித மாண்புடன் நோக்குவது எமது கடமை, இறந்த ஒருவரை தனியாகவும் கூட்டாகவும் நினைவேந்தல் செய்வதும் எமது பண்பாடு.

இலங்கையின் பன்மைச் சூழ்நிலையில் அனைவரையும் மனித மாண்புடன் நோக்குவது எமது கடமை, இறந்த ஒருவரை தனியாகவும் கூட்டாகவும் நினைவேந்தல் செய்வதும் எமது பண்பாடு.
நினைவேந்தல் ஒரு அடிப்படை மனிதவுரிமை. பொந்தியு பிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுக் கிறிஸ்துவை வழிபாட்டில் பற்றுறுதி அறிக்கை ஊடாக நினைவேந்தல் செய்வது கிறிஸ்தவர்களின் வரலாறு புனிதர்களை நினைவேந்தல் செய்தல் மற்றும் கிறிஸ்துவுக்குள் இறந்தோரை நினைவேந்தல் செய்தல் என்பனவும் நினைவேந்தலின் முக்கியத்துவத்தை குறித்துக் காட்டுகின்றன.

கிறிஸ்தவம் மட்டுமல்ல அனைத்து சமயங்களும் இறந்தவர்களை மாண்புடன் நினைவேந்தல் செய்கின்றன. சாவு ஒரு விளங்க முடியாத புதிர்.

நினைவேந்தல்களை உரிய மதிப்புடன் நோக்க இலங்கையர் அனைவரையும் யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் அழைக்கிறது. யாரும் நினைவேந்தல்களை சுயநல மேன்மைக்காகவோ, கட்சி அரசியலுக்கோ, இனவெறியை அல்லது மதவெறியை வெளிக்காட்டவோ பாவிக்கக்கூடாது. சாவு மனித தன்னலத்தை கேள்விக்குள்ளாக்குகிறது என்பதே "சுடலை ஞானம்".

நிலைவேந்தலை கூட்டாக இணைந்து மதிப்புடன் மேற்கொள்ளும் காலம் விரைவில் வரவேண்டும் உறவுகளை இழந்தோர் அவர்களுடைய உறவுகளை இயல்பாக நினைவேந்தல் செய்யும் நிலை ஏற்படவேண்டும். நினைவேந்தல் ஆதிக்கவாதத்துக்கோ, நினைவேந்தல் அச்சவாதத்திற்கோ இங்கு இடமில்லை எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.










நினைவேந்தல்களை சுயநல மேன்மைக்காகவோ, கட்சி அரசியலுக்காகவோ பயன்படுத்தாதீர்கள். யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் வேண்டுகோள்.samugammedia நினைவேந்தல்களை சுயநல மேன்மைக்காகவோ, கட்சி அரசியலுக்கோ, இனவெறியை அல்லது மதவெறியை வெளிக்காட்டவோ பாவிக்கக்கூடாது என யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.திருகோணமலையில்  திலீபனின் நினைவேந்தல் ஊர்தி தாக்கப்பட்ட  சம்பவத்திற்கு கண்டனம்  தெரிவித்தும் மற்றும் திலீபனின் நினைவேந்தல் தொடர்பிலும் யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் இன்று(22)  வெளியிட்டுள்ள  ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,கடந்த ஞாயிற்றுக்கிழமை(17) திருகோணமலையில் நடைபெற்ற சம்பவம், நினைவேந்தலை உரிய மாண்புடன், நினைவேந்தலாக நோக்க முடியாத நிலையில் நாம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது மிகுந்த வேதனையை தருகிறது. இதனை யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் கண்டிக்கின்றது. இலங்கையின் பன்மைச் சூழ்நிலையில் அனைவரையும் மனித மாண்புடன் நோக்குவது எமது கடமை, இறந்த ஒருவரை தனியாகவும் கூட்டாகவும் நினைவேந்தல் செய்வதும் எமது பண்பாடு.இலங்கையின் பன்மைச் சூழ்நிலையில் அனைவரையும் மனித மாண்புடன் நோக்குவது எமது கடமை, இறந்த ஒருவரை தனியாகவும் கூட்டாகவும் நினைவேந்தல் செய்வதும் எமது பண்பாடு.நினைவேந்தல் ஒரு அடிப்படை மனிதவுரிமை. பொந்தியு பிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுக் கிறிஸ்துவை வழிபாட்டில் பற்றுறுதி அறிக்கை ஊடாக நினைவேந்தல் செய்வது கிறிஸ்தவர்களின் வரலாறு புனிதர்களை நினைவேந்தல் செய்தல் மற்றும் கிறிஸ்துவுக்குள் இறந்தோரை நினைவேந்தல் செய்தல் என்பனவும் நினைவேந்தலின் முக்கியத்துவத்தை குறித்துக் காட்டுகின்றன. கிறிஸ்தவம் மட்டுமல்ல அனைத்து சமயங்களும் இறந்தவர்களை மாண்புடன் நினைவேந்தல் செய்கின்றன. சாவு ஒரு விளங்க முடியாத புதிர்.நினைவேந்தல்களை உரிய மதிப்புடன் நோக்க இலங்கையர் அனைவரையும் யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் அழைக்கிறது. யாரும் நினைவேந்தல்களை சுயநல மேன்மைக்காகவோ, கட்சி அரசியலுக்கோ, இனவெறியை அல்லது மதவெறியை வெளிக்காட்டவோ பாவிக்கக்கூடாது. சாவு மனித தன்னலத்தை கேள்விக்குள்ளாக்குகிறது என்பதே "சுடலை ஞானம்". நிலைவேந்தலை கூட்டாக இணைந்து மதிப்புடன் மேற்கொள்ளும் காலம் விரைவில் வரவேண்டும் உறவுகளை இழந்தோர் அவர்களுடைய உறவுகளை இயல்பாக நினைவேந்தல் செய்யும் நிலை ஏற்படவேண்டும். நினைவேந்தல் ஆதிக்கவாதத்துக்கோ, நினைவேந்தல் அச்சவாதத்திற்கோ இங்கு இடமில்லை எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement