எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பதை ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அல்லது வேறு எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க தன்னை முன்னிறுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சஜித் பிரேமதாச தனது கட்சி உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில்: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு விரைவில். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பதை ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அல்லது வேறு எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க தன்னை முன்னிறுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும், சஜித் பிரேமதாச தனது கட்சி உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.