• Oct 15 2024

கடற்பகுதியில் பயணிக்க வேண்டாம்...! மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!

Chithra / May 21st 2024, 3:30 pm
image

Advertisement

 

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரை காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கடற்பரப்பு அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

மேலும், மறு அறிவித்தல் வரை இந்த கடற்பகுதியில் பயணிக்க வேண்டாம் என கடல் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 - 3 மீற்றர் வரை எழக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரை கடல் அலைகள் கரையை வந்தடையும் சாத்தியம் காணப்படுகின்றது.


கடற்பகுதியில் பயணிக்க வேண்டாம். மீண்டும் சிவப்பு எச்சரிக்கை  கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரை காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கடற்பரப்பு அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.மேலும், மறு அறிவித்தல் வரை இந்த கடற்பகுதியில் பயணிக்க வேண்டாம் என கடல் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 - 3 மீற்றர் வரை எழக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரை கடல் அலைகள் கரையை வந்தடையும் சாத்தியம் காணப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement