• Oct 30 2024

நடுவீதியில் பொலிஸ் அதிகாரி முன்னால் சண்டித்தனம் காட்டிய சாரதி..!!

Tamil nila / Apr 6th 2024, 8:42 pm
image

Advertisement

நடுவீதியில் பொலிஸ் அதிகாரி முன்னால் சண்டித்தனம் காட்டிய சாரதி  ஒருவரை பேருந்தின் சாரதி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்ததால், தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு, இன்று பொலிஸில் ஆஜராகுமாறு பேருந்தின் சாரதிக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் அதனைத் தவிர்த்துள்ளார்.

அதாவது  சந்தேகத்திற்குரிய பேருந்தின் சாரதியை பிலியந்தலை - மிரிஸ்வத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எனினும்  வழக்கு முடியும் வரை சந்தேகத்திற்கிடமான சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தை பொலிஸ் பொறுப்பில் வைத்திருக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட தனது மகளை வைத்தியசாலைக்கு வேனில் ஏற்றிக்கொண்டு சென்ற போது , வழி இலக்கம் ​​120 ஹொரணை - கொழும்பு பேருந்து ஒன்றுக்கு வழி விடாமல் சென்றதால் சந்தேகநபரான பேருந்தின் சாரதி அந்த வேனை விபத்துக்குள்ளாக்க முயற்சித்துள்ளார்.

மேலும் வீதியில் போக்குவரத்து பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அருகே தனது வேனை நிறுத்திவிட்டு அதன் சாரதி இது குறித்து முறைப்பாடு செய்ய சென்ற போது, ​​சந்தேகநபரான பேருந்தின் சாரதி அந்த இடத்திற்கு வந்து வேனின் சாரதியை எட்டி உதைத்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி முன்னால் அவர் இவ்வாறு தாக்கிய விதம் வாகனம் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த கெமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.

நடுவீதியில் பொலிஸ் அதிகாரி முன்னால் சண்டித்தனம் காட்டிய சாரதி. நடுவீதியில் பொலிஸ் அதிகாரி முன்னால் சண்டித்தனம் காட்டிய சாரதி  ஒருவரை பேருந்தின் சாரதி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்ததால், தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு, இன்று பொலிஸில் ஆஜராகுமாறு பேருந்தின் சாரதிக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் அதனைத் தவிர்த்துள்ளார்.அதாவது  சந்தேகத்திற்குரிய பேருந்தின் சாரதியை பிலியந்தலை - மிரிஸ்வத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.எனினும்  வழக்கு முடியும் வரை சந்தேகத்திற்கிடமான சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தை பொலிஸ் பொறுப்பில் வைத்திருக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நோய்வாய்ப்பட்ட தனது மகளை வைத்தியசாலைக்கு வேனில் ஏற்றிக்கொண்டு சென்ற போது , வழி இலக்கம் ​​120 ஹொரணை - கொழும்பு பேருந்து ஒன்றுக்கு வழி விடாமல் சென்றதால் சந்தேகநபரான பேருந்தின் சாரதி அந்த வேனை விபத்துக்குள்ளாக்க முயற்சித்துள்ளார்.மேலும் வீதியில் போக்குவரத்து பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அருகே தனது வேனை நிறுத்திவிட்டு அதன் சாரதி இது குறித்து முறைப்பாடு செய்ய சென்ற போது, ​​சந்தேகநபரான பேருந்தின் சாரதி அந்த இடத்திற்கு வந்து வேனின் சாரதியை எட்டி உதைத்துள்ளார்.பொலிஸ் அதிகாரி முன்னால் அவர் இவ்வாறு தாக்கிய விதம் வாகனம் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த கெமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement