நாட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் அட்டை முறையிலான சாரதி அனுமதிப் பத்திர முறைமையை, இலத்திரனியல் சாரதி அனுமதிப் பத்திரமாக விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப் பத்திர அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் நாட்டின் எப்பகுதியிலிருந்தும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுபித்தல், காணாமல் போன சாரதி அனுமதிப் பத்திரத்தை மீளப் பெற்றுக்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை எதிர்காலத்தில் இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நடவடிக்கைகள் பரீட்சார்த்த மட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த நடவடிக்கையின் ஊடாக, காலத்தை மீதப்படுத்த முடியும் எனவும், பணத்தை மீதப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
புதிய சாரதி அனுமதிப் பத்திர முறையின் ஊடாக சாரதி அனுமதிப் பத்திர அட்டை விநியோகிக்கப்படாது என அவர் தெரிவிக்கின்றார்.
இதற்கு மாறாக கையடக்கத் தொலைபேசிகளிலேயே இலத்திரனியல் சாரதி அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்த முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப் பத்திர அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா குறிப்பிடுகின்றார்.
விசேட செயலி (APP) மூலம் சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பார்வையிட முடியும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
எதிர்வரும் காலத்தில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான அட்டைகள் விநியோகிக்கப்படாமையினால், பாரிய அந்நிய செலாவணியை இலங்கைக்கு சேமித்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிடுவதற்கான அட்டைகள் வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்யப்படுவதாகவும், இலத்திரனியல் சாரதி அனுமதிப் பத்திர முறையின் ஊடாக அந்த நடவடிக்கையை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
ஆண்டொன்றிற்கு 9 லட்சம் முதல் 10 லட்சம் வரையான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப் பத்திர அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா தெரிவிக்கின்றார்.
நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிடும் நடவடிக்கைகள் இராணுவம் வசமானதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இராணுவத்திடமிருந்து மீள அதனை தாம் பெற்றுக்கொள்ளும் போது சுமார் 10 லட்சம் வரையான சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடவேண்டிய கட்டாயம் காணப்பட்டதாகவும், 24 மணிநேர அச்சிடும் சேவையை ஆரம்பித்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தநிலையில், விநியோகிக்கப்படவுள்ளதாக 10 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்களில் தற்போது 2 லட்சம் வரை மாத்திரமே அச்சிட வேண்டியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த எஞ்சிய அச்சிடும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும் என கூறிய அவர், அதற்கு பின்னர் வழமை போன்று தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், ஒரு நாளில் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப் பத்திர அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா குறிப்பிடுகின்றார்.
டிஜிட்டல் மயமாகும் சாரதி அனுமதிப் பத்திரம்- வெளியான அறிவிப்பு. நாட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் அட்டை முறையிலான சாரதி அனுமதிப் பத்திர முறைமையை, இலத்திரனியல் சாரதி அனுமதிப் பத்திரமாக விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப் பத்திர அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா தெரிவிக்கின்றார்.இந்நிலையில் நாட்டின் எப்பகுதியிலிருந்தும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.அத்துடன் சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுபித்தல், காணாமல் போன சாரதி அனுமதிப் பத்திரத்தை மீளப் பெற்றுக்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை எதிர்காலத்தில் இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நடவடிக்கைகள் பரீட்சார்த்த மட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.இந்த நடவடிக்கையின் ஊடாக, காலத்தை மீதப்படுத்த முடியும் எனவும், பணத்தை மீதப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.புதிய சாரதி அனுமதிப் பத்திர முறையின் ஊடாக சாரதி அனுமதிப் பத்திர அட்டை விநியோகிக்கப்படாது என அவர் தெரிவிக்கின்றார்.இதற்கு மாறாக கையடக்கத் தொலைபேசிகளிலேயே இலத்திரனியல் சாரதி அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்த முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப் பத்திர அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா குறிப்பிடுகின்றார்.விசேட செயலி (APP) மூலம் சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பார்வையிட முடியும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.எதிர்வரும் காலத்தில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான அட்டைகள் விநியோகிக்கப்படாமையினால், பாரிய அந்நிய செலாவணியை இலங்கைக்கு சேமித்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிடுவதற்கான அட்டைகள் வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்யப்படுவதாகவும், இலத்திரனியல் சாரதி அனுமதிப் பத்திர முறையின் ஊடாக அந்த நடவடிக்கையை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.ஆண்டொன்றிற்கு 9 லட்சம் முதல் 10 லட்சம் வரையான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப் பத்திர அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா தெரிவிக்கின்றார்.நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிடும் நடவடிக்கைகள் இராணுவம் வசமானதாக அவர் குறிப்பிடுகின்றார்.இராணுவத்திடமிருந்து மீள அதனை தாம் பெற்றுக்கொள்ளும் போது சுமார் 10 லட்சம் வரையான சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடவேண்டிய கட்டாயம் காணப்பட்டதாகவும், 24 மணிநேர அச்சிடும் சேவையை ஆரம்பித்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.இந்தநிலையில், விநியோகிக்கப்படவுள்ளதாக 10 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்களில் தற்போது 2 லட்சம் வரை மாத்திரமே அச்சிட வேண்டியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த எஞ்சிய அச்சிடும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும் என கூறிய அவர், அதற்கு பின்னர் வழமை போன்று தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.அத்துடன், ஒரு நாளில் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப் பத்திர அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா குறிப்பிடுகின்றார்.