யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் மாலை, யாழ் மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவு முன்றலில் நடைபெற்றது.
இதன்போது, மாற்றுவலுவுள்ளோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக எழுத்துப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சைகள் என்பன ஏற்கனவே நடத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தினை இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வு யாழ் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்தினால் முன்னுதாரணமான முறையில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் அனுமதி வழங்கப்பட்ட 8 மோட்டார் வாகனங்களின் உரிமையாளர்களான எட்டு மாற்றுத்திறனாளி உரிமையாளர்களுக்கு இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டதோடு மேலும் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்ய முற்படுகின்ற பொழுது அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் மாற்றுவலுவுள்ளோருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள். யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் மாலை, யாழ் மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவு முன்றலில் நடைபெற்றது.இதன்போது, மாற்றுவலுவுள்ளோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக எழுத்துப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சைகள் என்பன ஏற்கனவே நடத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தினை இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.இந்நிகழ்வு யாழ் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்தினால் முன்னுதாரணமான முறையில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, யாழ்ப்பாணத்தில் அனுமதி வழங்கப்பட்ட 8 மோட்டார் வாகனங்களின் உரிமையாளர்களான எட்டு மாற்றுத்திறனாளி உரிமையாளர்களுக்கு இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டதோடு மேலும் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்ய முற்படுகின்ற பொழுது அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.