• Mar 22 2025

யாழ் வடமராட்சியில் போதைப்பொருள் தடுப்பு குழு அமைப்பு..!

Sharmi / Mar 22nd 2025, 11:42 am
image

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றையதினம்(21) போதைப்பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டது.

செம்பியன்பற்று வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில், பிரதேச போதைத் தடுப்பு உத்தியோகத்தர்களால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யபட்டது 

இக் கலந்துரையாடலில் கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொது அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் தற்காலத்தில் பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது 

இதன்பின் எதிர்காலத்தில் போதைப்பொருள் இல்லாத சமுகத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனும் எண்ணக்கருவில் கிராம போதைத் தடுப்பு குழுவும் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


யாழ் வடமராட்சியில் போதைப்பொருள் தடுப்பு குழு அமைப்பு. யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றையதினம்(21) போதைப்பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டது.செம்பியன்பற்று வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில், பிரதேச போதைத் தடுப்பு உத்தியோகத்தர்களால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யபட்டது இக் கலந்துரையாடலில் கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொது அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.இக் கலந்துரையாடலில் தற்காலத்தில் பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது இதன்பின் எதிர்காலத்தில் போதைப்பொருள் இல்லாத சமுகத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனும் எண்ணக்கருவில் கிராம போதைத் தடுப்பு குழுவும் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement