யாழ். சேந்தாங்குளம் கடலில் நேற்றையதினம் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவில் வாசல்இ இணுவிலைச் சேர்ந்த 20 வயதுடைய பி.சாருஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.
குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக சேந்தாங்குளம் கடலுக்கு சென்றிருந்தார்.. கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை கடலில் காணாமல் போயுள்ளார்
இந்நிலையில் குறித்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் இளைஞனின் சடலம் கரை ஒதுங்கியது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
குறித்த கடல் பகுதியானது பாரிய அலை எழும் பகுதியாக காணப்படுவதோடு அங்கு எதுவிதமானக எச்சரிக்கை அறிவிப்புகளும் காட்சிப்படுத்தப்படவில்லை.
இதற்கு முன்னரும் இதே பகுதியில் இவ்வாறான மரணங்கள் சம்பவித்துள்ளன.
எனவே உரிய எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்சிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு யாழில் துயரம் யாழ். சேந்தாங்குளம் கடலில் நேற்றையதினம் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல்இ இணுவிலைச் சேர்ந்த 20 வயதுடைய பி.சாருஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக சேந்தாங்குளம் கடலுக்கு சென்றிருந்தார். கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை கடலில் காணாமல் போயுள்ளார்இந்நிலையில் குறித்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் இளைஞனின் சடலம் கரை ஒதுங்கியது.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.குறித்த கடல் பகுதியானது பாரிய அலை எழும் பகுதியாக காணப்படுவதோடு அங்கு எதுவிதமானக எச்சரிக்கை அறிவிப்புகளும் காட்சிப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னரும் இதே பகுதியில் இவ்வாறான மரணங்கள் சம்பவித்துள்ளன. எனவே உரிய எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்சிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது