• Sep 21 2024

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் சோதனை - பொலிஸ்மா அதிபரின் அதிரடி உத்தரவு

Chithra / Dec 25th 2022, 9:05 am
image

Advertisement

பாடசாலை மாணவர்களை சிரமம் ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் தடுப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையிலான அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எழுத்துமூல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் பைகளை முற்றிலும் நம்பகமான தகவல்கள் இல்லாமல் சோதனை செய்வது நியாயமானதல்ல என பொலிஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.


குறிப்பிட்ட பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் மாத்திரமே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் இவ்வாறான தேடுதல் நடத்தப்பட்டால், அதனை பகிரங்கமாகச் செய்யக்கூடாது, அவ்வாறான சந்தர்ப்பங்களை புகைப்படம் எடுக்கவோ அல்லது வீடியோ எடுக்கவோ கூடாது எனவும் பொலிஸ் மா அதிபர் தனது உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் சோதனை - பொலிஸ்மா அதிபரின் அதிரடி உத்தரவு பாடசாலை மாணவர்களை சிரமம் ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் தடுப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையிலான அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எழுத்துமூல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.பாடசாலை மாணவர்களின் பைகளை முற்றிலும் நம்பகமான தகவல்கள் இல்லாமல் சோதனை செய்வது நியாயமானதல்ல என பொலிஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் மாத்திரமே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் இவ்வாறான தேடுதல் நடத்தப்பட்டால், அதனை பகிரங்கமாகச் செய்யக்கூடாது, அவ்வாறான சந்தர்ப்பங்களை புகைப்படம் எடுக்கவோ அல்லது வீடியோ எடுக்கவோ கூடாது எனவும் பொலிஸ் மா அதிபர் தனது உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement