• Sep 21 2024

முகநூல் ஊடாக ஒழுங்கு செய்யப்படும் கொண்டாடங்களில் போதைப்பொருள்! விளிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை

Chithra / Dec 18th 2022, 11:39 am
image

Advertisement

பிள்ளைகள் அதிகம் பணத்தை கேட்பது, அதிகளவில் பயணங்களை மேற்கொள்வது, தேவையற்ற வகையில் நண்பர்களுடன் பழகுவது அதிகமாக இருந்தால், பெற்றோர் உடனடியாக பிள்ளைகள் தொடர்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாடசாலை பிள்ளைகள் மற்றும் இளையோர் மத்தியில் தற்போது ஐஸ் என்ற போதைப் பொருள் பல்வேறு வடிவங்களில் பரவி வருகிறது. அதில் இருந்து பிள்ளைகளை காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கின்றது.

குறிப்பாக வட்ஸ் அப் குழுக்கள் ஊடாக பிள்ளைகள் ஒன்றுக்கூடும் நிகழ்வுகள் தொடர்பாக பெற்றோர் விளிப்பாகவும் அவதானத்துடனும் இருக்க வேண்டும். இல்லை என்றால், பிள்ளை அழிவை நோக்கி சென்று விடுவார்கள்.

மேலும் முகநூல் ஊடாக ஒழுங்கு செய்யப்படும் நத்தார் வைபவங்கள், புது வருட கொண்டாடங்களின் பிள்ளைகள் கலந்துக்கொள்ள இடமளிக்க வேண்டாம்.

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏற்கனவே பிள்ளைகளுக்கு விளக்கி, சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகங்கள் ஊடாக நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களின் திறமைகளை அதிகரிப்பதற்காக கல்வியமைச்சுடன் இணைந்து பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இவற்றின் ஊடாக பிள்ளைகளின் எண்ணங்கள் சிறந்தவை நோக்கி திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

ஐஸ் போன்ற போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்து விடுவார்கள் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துவோரின் மூளையின் செல்கள் துரிதமாக இறக்க ஆரம்பிக்கும். இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு அந்த போதை பொருளை பயன்படுத்தும் நபர்கள் மரணத்தை தழுவ நேரிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஐஸ், ஹெரோயின் போன்ற விஷ போதைப் பொருட்கள் மனித குலத்தை அழித்து விடும் எனவும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

முகநூல் ஊடாக ஒழுங்கு செய்யப்படும் கொண்டாடங்களில் போதைப்பொருள் விளிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை பிள்ளைகள் அதிகம் பணத்தை கேட்பது, அதிகளவில் பயணங்களை மேற்கொள்வது, தேவையற்ற வகையில் நண்பர்களுடன் பழகுவது அதிகமாக இருந்தால், பெற்றோர் உடனடியாக பிள்ளைகள் தொடர்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.பாடசாலை பிள்ளைகள் மற்றும் இளையோர் மத்தியில் தற்போது ஐஸ் என்ற போதைப் பொருள் பல்வேறு வடிவங்களில் பரவி வருகிறது. அதில் இருந்து பிள்ளைகளை காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கின்றது.குறிப்பாக வட்ஸ் அப் குழுக்கள் ஊடாக பிள்ளைகள் ஒன்றுக்கூடும் நிகழ்வுகள் தொடர்பாக பெற்றோர் விளிப்பாகவும் அவதானத்துடனும் இருக்க வேண்டும். இல்லை என்றால், பிள்ளை அழிவை நோக்கி சென்று விடுவார்கள்.மேலும் முகநூல் ஊடாக ஒழுங்கு செய்யப்படும் நத்தார் வைபவங்கள், புது வருட கொண்டாடங்களின் பிள்ளைகள் கலந்துக்கொள்ள இடமளிக்க வேண்டாம்.போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏற்கனவே பிள்ளைகளுக்கு விளக்கி, சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகங்கள் ஊடாக நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பாடசாலை மாணவர்களின் திறமைகளை அதிகரிப்பதற்காக கல்வியமைச்சுடன் இணைந்து பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக பிள்ளைகளின் எண்ணங்கள் சிறந்தவை நோக்கி திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.ஐஸ் போன்ற போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்து விடுவார்கள் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துவோரின் மூளையின் செல்கள் துரிதமாக இறக்க ஆரம்பிக்கும். இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு அந்த போதை பொருளை பயன்படுத்தும் நபர்கள் மரணத்தை தழுவ நேரிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.மேலும் ஐஸ், ஹெரோயின் போன்ற விஷ போதைப் பொருட்கள் மனித குலத்தை அழித்து விடும் எனவும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement