• May 18 2024

இலங்கைக்கு கடும் நிபந்தனை விதித்த சர்வதேச நாணய நிதியம்!

IMF
Chithra / Dec 18th 2022, 11:03 am
image

Advertisement

கடன் மறுசீரமைப்பை ஆதரிப்பதாக இலங்கையின் கடனாளி நாடுகள் உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கும் வரை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன்களை அங்கீகரிக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற முக்கிய கடன் வழங்கும் நாடுகளும், பாரிஸ் கிளப்பில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.

பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக இலங்கை மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்ற வேண்டும் எனவும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியம் இரண்டாவது பணிப்பாளர் கூட்டத்தை நடத்தவுள்ள ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு முன்னர் அரசாங்கம் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றி கடன் வழங்கும் நாடுகளின் பரிந்துரைகளைப் பெற்றால், முன்மொழியப்பட்ட கடன்தொகை முதல் பகுதிக்கு இலங்கை அங்கீகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


இலங்கைக்கு கடும் நிபந்தனை விதித்த சர்வதேச நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பை ஆதரிப்பதாக இலங்கையின் கடனாளி நாடுகள் உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கும் வரை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன்களை அங்கீகரிக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற முக்கிய கடன் வழங்கும் நாடுகளும், பாரிஸ் கிளப்பில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக இலங்கை மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்ற வேண்டும் எனவும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சர்வதேச நாணய நிதியம் இரண்டாவது பணிப்பாளர் கூட்டத்தை நடத்தவுள்ள ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு முன்னர் அரசாங்கம் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றி கடன் வழங்கும் நாடுகளின் பரிந்துரைகளைப் பெற்றால், முன்மொழியப்பட்ட கடன்தொகை முதல் பகுதிக்கு இலங்கை அங்கீகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement