• Sep 08 2024

யுத்தத்தில் உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூர்ந்து கிண்ணியாவில் துஆ பிரார்த்தனை...!

Sharmi / May 18th 2024, 2:05 pm
image

Advertisement

கடந்த 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வும் துஆ பிரார்த்தனையும் கிண்ணியாவில் இன்று (18) இடம் பெற்றது.

"பயங்கரவாதம் அற்ற நாட்டை உருவாக்குவோம் " என்ற தொனிப்பொருழின் கீழ் இடம் பெற்ற குறித்த நிகழ்வை, கிண்ணியா சமூக நலன் விரும்பிகள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

கிண்ணியா புஹாரி பள்ளிவாயலின் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி மாணவர்கள்,  யுத்தத்தின் போது உயிர் நீத்த படை வீரர்களுக்காக இதன் போது துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கிண்ணியா புஹாரியடி மணிக் கூட்டுக் கோபுர சந்தியில் இருந்து கிண்ணியா பிரதான வீதி ஊடாக நடை பவணியாக இலங்கை தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். 

இதன் போது குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி கலந்து கொண்டார்.

இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,

2009ல் கொடிய யுத்தத்தை ஒழித்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கிண்ணியா மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவிக்கிறேன்.

ஆயுத கலாசாரமின்றி பயங்கரவாதமற்ற நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

இதில் அரபுக் கல்லூரி மாணவர்கள்,கிண்ணியா பிரதேச நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




யுத்தத்தில் உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூர்ந்து கிண்ணியாவில் துஆ பிரார்த்தனை. கடந்த 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வும் துஆ பிரார்த்தனையும் கிண்ணியாவில் இன்று (18) இடம் பெற்றது."பயங்கரவாதம் அற்ற நாட்டை உருவாக்குவோம் " என்ற தொனிப்பொருழின் கீழ் இடம் பெற்ற குறித்த நிகழ்வை, கிண்ணியா சமூக நலன் விரும்பிகள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். கிண்ணியா புஹாரி பள்ளிவாயலின் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி மாணவர்கள்,  யுத்தத்தின் போது உயிர் நீத்த படை வீரர்களுக்காக இதன் போது துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கிண்ணியா புஹாரியடி மணிக் கூட்டுக் கோபுர சந்தியில் இருந்து கிண்ணியா பிரதான வீதி ஊடாக நடை பவணியாக இலங்கை தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். இதன் போது குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி கலந்து கொண்டார். இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர், 2009ல் கொடிய யுத்தத்தை ஒழித்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கிண்ணியா மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவிக்கிறேன்.ஆயுத கலாசாரமின்றி பயங்கரவாதமற்ற நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.இதில் அரபுக் கல்லூரி மாணவர்கள்,கிண்ணியா பிரதேச நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement