• Jun 17 2024

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு...! சற்றுமுன் வெளியான அறிவிப்பு...!

Sharmi / May 18th 2024, 2:37 pm
image

Advertisement

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இன்று(18) அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன் மே 19 வரையில் அந்த செயற்பாடு பிற்போடப்பட்ட நிலையில் தற்போது மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கப்பல் சேவைக்காக ஆசன  முற்பதிவை மேற்கொண்டவர்கள் தமது கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு செலுத்திய கட்டணத்தினை மீளப்பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு. சற்றுமுன் வெளியான அறிவிப்பு. நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இன்று(18) அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன் மே 19 வரையில் அந்த செயற்பாடு பிற்போடப்பட்ட நிலையில் தற்போது மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கப்பல் சேவைக்காக ஆசன  முற்பதிவை மேற்கொண்டவர்கள் தமது கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு செலுத்திய கட்டணத்தினை மீளப்பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement