• Jun 26 2024

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தலை முன்னிட்டு மட்டு நகரில் பேரணி...!

Sharmi / May 18th 2024, 12:25 pm
image

Advertisement

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு இன்று(18)  காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்

நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு காந்தி பூங்காவை சுற்றி கோசங்கள் எழுப்பி பேரணி இடம்பெற்றது.

இதன் பின்னர் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு பிரதான சுடர் ஏற்றி, மலர்மாலை தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அதிகளவான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.

இதேவேலை குறித்த இடத்திற்கு வருகை தந்த மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் எம்.இஸ்ஸதீன் அவர்களிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தலை முன்னிட்டு மட்டு நகரில் பேரணி. முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு இன்று(18)  காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு காந்தி பூங்காவை சுற்றி கோசங்கள் எழுப்பி பேரணி இடம்பெற்றது.இதன் பின்னர் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு பிரதான சுடர் ஏற்றி, மலர்மாலை தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.அத்தோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இந் நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அதிகளவான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.இதேவேலை குறித்த இடத்திற்கு வருகை தந்த மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் எம்.இஸ்ஸதீன் அவர்களிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement