• Jul 03 2025

60 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்!

shanuja / Jul 2nd 2025, 3:48 pm
image


கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 60 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கொழும்பு கார்கோ எக்‌ஸ்பிரஸிக்கு கொண்டுவரப்பட்ட பொதிகளிலிருந்து, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 

சூட்சுமமான முறையில் பொதிகளுக்குள் மறைத்து வைத்துப் போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருகோட தெரிவித்துள்ளார். 


இதன்படி, குறித்த பொதிகளிலிருந்து 1,101 கிராம் கொக்கைன் ரக போதைப்பொருளும், 1,666 கிராம் குஷ் ரக போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர்  தெரிவித்துள்ளார்.

60 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 60 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கொழும்பு கார்கோ எக்‌ஸ்பிரஸிக்கு கொண்டுவரப்பட்ட பொதிகளிலிருந்து, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சூட்சுமமான முறையில் பொதிகளுக்குள் மறைத்து வைத்துப் போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருகோட தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த பொதிகளிலிருந்து 1,101 கிராம் கொக்கைன் ரக போதைப்பொருளும், 1,666 கிராம் குஷ் ரக போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement