• Nov 28 2024

வளிமண்டல குழப்பம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்

Anaath / Oct 10th 2024, 8:37 am
image

இலங்கையை அண்மித்துள்ள பகுதியில் வளிமண்டல குழப்பத்தின் காரணமாக இன்று (10) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், மேல்இ சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

வட மாகாணத்தில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்று மேற்கிலிருந்து தென்மேற்கு திசையாக வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு (30-40) கிமீ ஆக இருக்கும் மற்றும் சில நேரங்களில் மணிக்கு (50-60) கிமீ வரை அதிகரிக்கலாம்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது திசையில் மாறுபடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (25-35) கிலோமீற்றர்களாக காணப்படும்.

கடல் நிலை:

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகள் சிறிதளவு முதல் மிதமானது வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

வளிமண்டல குழப்பம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும் இலங்கையை அண்மித்துள்ள பகுதியில் வளிமண்டல குழப்பத்தின் காரணமாக இன்று (10) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், மேல்இ சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.வட மாகாணத்தில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.காற்று:மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்று மேற்கிலிருந்து தென்மேற்கு திசையாக வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு (30-40) கிமீ ஆக இருக்கும் மற்றும் சில நேரங்களில் மணிக்கு (50-60) கிமீ வரை அதிகரிக்கலாம்.நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது திசையில் மாறுபடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (25-35) கிலோமீற்றர்களாக காணப்படும்.கடல் நிலை:மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகள் சிறிதளவு முதல் மிதமானது வரை காணப்படும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Advertisement

Advertisement

Advertisement