• Jul 21 2025

சீரழிக்கப்பட்ட பெண்களை புதைக்க 25 ரூபா சம்பளம் பெற்ற ஊழியர் ; கர்நாடகாவில் கொடூரம்!

shanuja / Jul 21st 2025, 3:15 pm
image

ஆலயமொன்றின் வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் புதைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சீரழிக்கப்பட்ட பெண்களைப் புதைக்க 25 ருபா சம்பளம் பெற்றதாக ஊழியர் ஒருவர் தெரிவித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் - தாலுகாவில் உள்ள தர்மஸ்தலாவில் பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவிலில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


மஞ்சுநாதர் கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொல்லப்பட்டதாகவும் குறித்த ஆலய நிர்வாகத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளது ஒட்டுமொத்த மாநிலைத்தையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 


இது தொடர்பாக தர்மஸ்தலா   நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்)  3ஆம் திகதி புகைப்பட ஆவணங்களுடன் முறைப்பாடு வழங்கினார். 


அதன்பின்னர் மங்களூரு  நீதிமன்றில் விசாரணைக்காக முன்னிலையாகிய போது புதைக்கப்பட்ட பெண்களின் சில எலும்புகளையும் கொண்டு  சென்றார். நீதிமன்றில் தெரிவிக்கையில், ஆலயத்தில் சடலங்களைப் புதைக்க 25 ரூபா சம்பளம் வழங்குகின்றோம் என்று கூறி சிலர் சடலங்களை வழங்கினர். அவ்வாறு வழங்கப்பட்ட சடலங்கள் 100க்கும் மேற்பட்ட பெண்களுடையது. 


கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. 


கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க் கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். குறிப்பாக இந்த பாலியல் மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். 


இது தொடர்பில் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு ஆகியவற்றை அமைத்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொன்று புதைக்கப்பட்டனர் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து பெண்களிடையே பெரும் அச்சத்தையும் ஒட்டுமொத்த சமூகத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சீரழிக்கப்பட்ட பெண்களை புதைக்க 25 ரூபா சம்பளம் பெற்ற ஊழியர் ; கர்நாடகாவில் கொடூரம் ஆலயமொன்றின் வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் புதைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சீரழிக்கப்பட்ட பெண்களைப் புதைக்க 25 ருபா சம்பளம் பெற்றதாக ஊழியர் ஒருவர் தெரிவித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் - தாலுகாவில் உள்ள தர்மஸ்தலாவில் பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவிலில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஞ்சுநாதர் கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொல்லப்பட்டதாகவும் குறித்த ஆலய நிர்வாகத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளது ஒட்டுமொத்த மாநிலைத்தையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக தர்மஸ்தலா   நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்)  3ஆம் திகதி புகைப்பட ஆவணங்களுடன் முறைப்பாடு வழங்கினார். அதன்பின்னர் மங்களூரு  நீதிமன்றில் விசாரணைக்காக முன்னிலையாகிய போது புதைக்கப்பட்ட பெண்களின் சில எலும்புகளையும் கொண்டு  சென்றார். நீதிமன்றில் தெரிவிக்கையில், ஆலயத்தில் சடலங்களைப் புதைக்க 25 ரூபா சம்பளம் வழங்குகின்றோம் என்று கூறி சிலர் சடலங்களை வழங்கினர். அவ்வாறு வழங்கப்பட்ட சடலங்கள் 100க்கும் மேற்பட்ட பெண்களுடையது. கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க் கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். குறிப்பாக இந்த பாலியல் மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு ஆகியவற்றை அமைத்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொன்று புதைக்கப்பட்டனர் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து பெண்களிடையே பெரும் அச்சத்தையும் ஒட்டுமொத்த சமூகத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement