• Jul 21 2025

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் தலைமறைவு!

Chithra / Jul 21st 2025, 2:56 pm
image

 


களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்காக களுத்துறை வீட்டிற்கு சென்றவேளை மகளும் அவரது கணவரும் வீட்டில் இருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத பாகங்கள் சேர்க்கப்பட்ட ஜீப் குறித்து நடந்த விசாரணையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான, 19ம் திகதி மதுகம நகரில் பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

ரசிக விதானவிடம் இடம்பெற்ற விசாரணையில் அந்த  ஜீப், ரோஹித அபேகுணவர்தனவின் மகளிடமிருந்து வாங்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்கு பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்ற வேளையில் அவர் தலைமறைவாகியிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் தலைமறைவு  களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்காக களுத்துறை வீட்டிற்கு சென்றவேளை மகளும் அவரது கணவரும் வீட்டில் இருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சட்டவிரோத பாகங்கள் சேர்க்கப்பட்ட ஜீப் குறித்து நடந்த விசாரணையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான, 19ம் திகதி மதுகம நகரில் பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.ரசிக விதானவிடம் இடம்பெற்ற விசாரணையில் அந்த  ஜீப், ரோஹித அபேகுணவர்தனவின் மகளிடமிருந்து வாங்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.இது தொடர்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்கு பாணந்துறை மற்றும் வாலனை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்ற வேளையில் அவர் தலைமறைவாகியிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement