• Jul 21 2025

யாழில் பனைசார் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும்!

shanuja / Jul 21st 2025, 2:55 pm
image


"எங்கள் வாழ்வியலில் பனை” என்ற தொனிப்பொருளில் நடத்தும் பனைசார் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும்  நல்லூர் சங்கிலியன் பூங்காவில்   ஜூலை 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமைவரை மு.ப 9.30 மணி தொடக்கம் பி.ப 8.மணி வரை இடம்பெறவுள்ளன.


வடமாகாண பனை எழுச்சி வாரத்தை முன்னிட்டு, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து  குறித்த கண்காட்சியையும் விற்பனையையும் ஏற்பாடு செய்துள்ளன. 


வடக்கு மாகாண கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருமான நடராஜா திருலிங்கநாதன் தலைமையில் நடைபெறவுள்ள ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சு செயலாளர் மு.நந்தகோபாலன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


தொடர்ந்து கலைநிகழ்வுகள் பி.ப 6.00 மணி முதல் இடம்பெறும் என்றும் ஏற்பாட்டு குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பனைசார் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும் "எங்கள் வாழ்வியலில் பனை” என்ற தொனிப்பொருளில் நடத்தும் பனைசார் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும்  நல்லூர் சங்கிலியன் பூங்காவில்   ஜூலை 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமைவரை மு.ப 9.30 மணி தொடக்கம் பி.ப 8.மணி வரை இடம்பெறவுள்ளன.வடமாகாண பனை எழுச்சி வாரத்தை முன்னிட்டு, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து  குறித்த கண்காட்சியையும் விற்பனையையும் ஏற்பாடு செய்துள்ளன. வடக்கு மாகாண கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருமான நடராஜா திருலிங்கநாதன் தலைமையில் நடைபெறவுள்ள ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சு செயலாளர் மு.நந்தகோபாலன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.தொடர்ந்து கலைநிகழ்வுகள் பி.ப 6.00 மணி முதல் இடம்பெறும் என்றும் ஏற்பாட்டு குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement