• Sep 20 2024

யாழில் வீசிய பலத்த காற்று காரணமாக இரண்டு பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்பு!

Anaath / Aug 21st 2024, 5:51 pm
image

Advertisement

யாழில்  வீசிய கடும் காற்று காரணமாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் உள்ள மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இந்த காற்றானது இன்றையதினம் (21) வீசியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அனர்த்தத்தினால் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த பதினொரு அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் புலோலி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள நாகதம்பிரான் கோவில் மீது பனைமரம் முறிந்து விழுந்ததால் கோவிலும் முற்றாக சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் வீசிய பலத்த காற்று காரணமாக இரண்டு பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்பு யாழில்  வீசிய கடும் காற்று காரணமாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் உள்ள மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.இந்த காற்றானது இன்றையதினம் (21) வீசியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த அனர்த்தத்தினால் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த பதினொரு அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் புலோலி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள நாகதம்பிரான் கோவில் மீது பனைமரம் முறிந்து விழுந்ததால் கோவிலும் முற்றாக சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement