• Mar 11 2025

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில், பெண்களுக்காக முற்போக்கு ரீதியான சட்டங்கள் உருவாக்கப்படும்- பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

Thansita / Mar 10th 2025, 9:00 pm
image

எமது ஆட்சி காலத்தில், பெண்ணியம் சார் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க கூடியவாரான, முற்போக்கு ரீதியான சட்டங்கள் உருவாக்கப்படும் என வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு இன்று (10) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி சக்தியின் திருகோணமலை மாவட்ட மகளிர் அமைப்பின் அமைப்பாளர் பிரமிளா பிரியதர்சினி தலைமையில், 'மறுமலர்ச்சிக்கான பெண்கள் வலிமையை கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,

இந்த நாட்டின் அனைத்து பெண்களும் நிச்சயமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இந்த நிலையில், பெண்களின் அரசியல் பிரவேசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கிட்டும் வரை, அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கப் போவதில்லை என்ற பிரதமரின் கூற்றை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

புதிய சட்டங்கள் பெண்களுக்காக உருவாக்கப்படுகின்ற போது, எந்த சமூகமும் புறக்கணிக்கப்படமாட்டாது இதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். 

இலங்கையின் வரலாற்றில், அதிக பெண்களைக் கொண்ட பாராளுமன்றத்தை அமைத்திருப்பது தேசிய மக்கள் சக்தியின் வரலாற்றுச் சாதனையாகும்.

உலகில் தற்போது இருக்கின்ற அனைத்து விதமான பெண்ணியம் சார் சட்டங்களும், பல போராட்டங்களின் விளைவாக உருவாக்கப்பட்டவைகளாகும். பெண்களின் உரிமைகளும் பாதுகாப்பும் இந்த சட்டங்களால் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. இதற்குப் பின்னால் பெண்களின் ஓங்கிய குரல் ஒலித்திருக்கின்றது. இதுவே யாதார்த்தமாகும். 

கடந்த கால அரசாங்கங்கள் சமூக நெருக்கடிகள் குறித்து சிந்திக்காத வரவு செலவு திட்டங்களையே முன் வைத்தன. இதனால் பெண்களின் பிரச்சினைகள் அதிகரித்தன. தற்போது எமது அரசாங்கம் முன் வைத்திருக்கின்ற வரவு செலவு திட்டம் , பெண்களின் நலன்சார் விடயங்கள் குறித்து, அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

தற்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றது,  

இலங்கையின் சொத்துக்களை தனியாருக்கும், வெளிநாடுகளுக்கும் விற்க வேண்டுமென்ற சிந்தனையைக் கொண்ட வரவு செலவுத் திட்டங்களையே நாங்கள் முன்னர் பார்த்திருக்கின்றோம். ஆனால், தற்போதைய வரவு செலவுத் திட்டம் நாட்டின் சொத்துக்களை பாதுகாக்கின்ற ஒரு வரவு செலவு திட்டம் என்பதை உங்களிடம் கூறி வைக்க விரும்புகிறேன்.

அரச ஊழியர்களுக்கு மாத்திரமன்றி, தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டின் வருமானத்தையும் , மனிதவள அபிவிருத்தியும் இணையாக கருத்தில் கொண்டு, ஒரு சமநிலையான வரவு செலவுத் திட்டம் இலங்கை அரசியல் வரலாற்றில் இம்முறைதான் முதன்முறையாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில், பெண்களுக்காக முற்போக்கு ரீதியான சட்டங்கள் உருவாக்கப்படும்- பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா எமது ஆட்சி காலத்தில், பெண்ணியம் சார் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க கூடியவாரான, முற்போக்கு ரீதியான சட்டங்கள் உருவாக்கப்படும் என வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு இன்று (10) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தி சக்தியின் திருகோணமலை மாவட்ட மகளிர் அமைப்பின் அமைப்பாளர் பிரமிளா பிரியதர்சினி தலைமையில், 'மறுமலர்ச்சிக்கான பெண்கள் வலிமையை கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,இந்த நாட்டின் அனைத்து பெண்களும் நிச்சயமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இந்த நிலையில், பெண்களின் அரசியல் பிரவேசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கிட்டும் வரை, அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கப் போவதில்லை என்ற பிரதமரின் கூற்றை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.புதிய சட்டங்கள் பெண்களுக்காக உருவாக்கப்படுகின்ற போது, எந்த சமூகமும் புறக்கணிக்கப்படமாட்டாது இதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இலங்கையின் வரலாற்றில், அதிக பெண்களைக் கொண்ட பாராளுமன்றத்தை அமைத்திருப்பது தேசிய மக்கள் சக்தியின் வரலாற்றுச் சாதனையாகும்.உலகில் தற்போது இருக்கின்ற அனைத்து விதமான பெண்ணியம் சார் சட்டங்களும், பல போராட்டங்களின் விளைவாக உருவாக்கப்பட்டவைகளாகும். பெண்களின் உரிமைகளும் பாதுகாப்பும் இந்த சட்டங்களால் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன. இதற்குப் பின்னால் பெண்களின் ஓங்கிய குரல் ஒலித்திருக்கின்றது. இதுவே யாதார்த்தமாகும். கடந்த கால அரசாங்கங்கள் சமூக நெருக்கடிகள் குறித்து சிந்திக்காத வரவு செலவு திட்டங்களையே முன் வைத்தன. இதனால் பெண்களின் பிரச்சினைகள் அதிகரித்தன. தற்போது எமது அரசாங்கம் முன் வைத்திருக்கின்ற வரவு செலவு திட்டம் , பெண்களின் நலன்சார் விடயங்கள் குறித்து, அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.தற்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றது,  இலங்கையின் சொத்துக்களை தனியாருக்கும், வெளிநாடுகளுக்கும் விற்க வேண்டுமென்ற சிந்தனையைக் கொண்ட வரவு செலவுத் திட்டங்களையே நாங்கள் முன்னர் பார்த்திருக்கின்றோம். ஆனால், தற்போதைய வரவு செலவுத் திட்டம் நாட்டின் சொத்துக்களை பாதுகாக்கின்ற ஒரு வரவு செலவு திட்டம் என்பதை உங்களிடம் கூறி வைக்க விரும்புகிறேன்.அரச ஊழியர்களுக்கு மாத்திரமன்றி, தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.நாட்டின் வருமானத்தையும் , மனிதவள அபிவிருத்தியும் இணையாக கருத்தில் கொண்டு, ஒரு சமநிலையான வரவு செலவுத் திட்டம் இலங்கை அரசியல் வரலாற்றில் இம்முறைதான் முதன்முறையாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement