• Mar 01 2025

பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம்..!

Sharmi / Feb 28th 2025, 10:55 am
image

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.14 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேபாளத்தின் பைரப் குண்டா அருகே உள்ள சிந்துபால்சோக் மாவட்டத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதேவேளை,அதிகாலை 2:35 மணிக்கு இமயமலைப் பகுதியிலும் இந்தியாவின் பீகாரின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம். பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.14 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.முன்னதாக, நேபாளத்தின் பைரப் குண்டா அருகே உள்ள சிந்துபால்சோக் மாவட்டத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.அதேவேளை,அதிகாலை 2:35 மணிக்கு இமயமலைப் பகுதியிலும் இந்தியாவின் பீகாரின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement