• Jul 20 2025

கல்மடுநகர் மாகாண மூலிகைக் கிராமத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் களவிஜயம்!

shanuja / Jul 19th 2025, 11:01 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் மாகாண மூலிகைக் கிராமத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  இன்று (19) களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.


100 ஏக்கர் காணி கொண்ட மூலிகை தோட்டத்தின் ஒரு பகுதி அண்மையில்  வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ளதால் அதன் தன்மைகள் குறித்து ஆராயப்பட்டது.


மூலிகை தோட்டத்திற்கு  நீர்ப்பாசனம் செய்வதிலுள்ள சவால்கள் அதற்கு ஏதுவான சாதக வழிவகைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


மேலும், தோட்டத்தின் தற்போதைய நிலைமைகள், மூலிகை செய்கையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் நிலைமைகள் குறித்து துறைசார் அதிகாரிகள், விவசாயிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடினார்.


மாகாண மூலிகைக் கிராமத்தில் அமைந்துள்ள கிராமிய சித்த வைத்தியசாலையினையும் வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டர். மேலும் குறித்த வளாகத்தில் மூன்று மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன. 


களவிஜயதத்தில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர் கை.பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கல்மடுநகர் மாகாண மூலிகைக் கிராமத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் களவிஜயம் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் மாகாண மூலிகைக் கிராமத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  இன்று (19) களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.100 ஏக்கர் காணி கொண்ட மூலிகை தோட்டத்தின் ஒரு பகுதி அண்மையில்  வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ளதால் அதன் தன்மைகள் குறித்து ஆராயப்பட்டது.மூலிகை தோட்டத்திற்கு  நீர்ப்பாசனம் செய்வதிலுள்ள சவால்கள் அதற்கு ஏதுவான சாதக வழிவகைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.மேலும், தோட்டத்தின் தற்போதைய நிலைமைகள், மூலிகை செய்கையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் நிலைமைகள் குறித்து துறைசார் அதிகாரிகள், விவசாயிகளுடன் வடக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடினார்.மாகாண மூலிகைக் கிராமத்தில் அமைந்துள்ள கிராமிய சித்த வைத்தியசாலையினையும் வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டர். மேலும் குறித்த வளாகத்தில் மூன்று மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன. களவிஜயதத்தில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர் கை.பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement