• May 01 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...! அறத்தின் பால் நீதியை நிலை நாட்ட சர்வதேச விசாரணையே அவசியம்...!சிவகரன் வலியுறுத்து...!samugammedia

Sharmi / Sep 12th 2023, 9:15 pm
image

Advertisement

காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைகளை போல் கானல் நீராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அமைந்து விடக்கூடாது.அறத்தின் பால் நீதியை நிலை நாட்ட சர்வதேச விசாரணையே அவசியமாகும் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சனல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட தகவல் என்பது ஒரு அதிர்ச்சிகரமான விடயம் இல்லை. ஏலவே அரசியல் அரங்கில் எழுப்பப்பட்ட ஐயத்திற்கான எடுகோலே. இதனை சர்வதேச நிபுணர்களைக் கொண்டு விசாரிப்பது அவசியமாகும்.

கடந்த காலத்தில் உள்நாட்டு  விசாரணைகளின் அறிக்கைகள் எப்படி வெற்றுப் பத்திரமாகக்காணப்பட்டது என்பதை யாவரும் அறிவார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை பௌத்த தேசியவாத மேட்டிமைத்தனம் யுத்த வெற்றி வாதம் எனும் இனவாதக் கோசம் மேலெழுந்து மூடி மறைத்தது போல் இதையும் நோக்கினால் குற்றவாளியே குற்றவாளியை விசாரிக்கும் கங்காரு நீதிமன்ற முறைமை போல் அமைந்து விடும்.

இந்த நாட்டில் நடுநிலையோடு நீதியை நிலை நாட்ட கூடிய  நிபுணத்துவம் உள்ளவர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கிடைத்திருக்கும்.

உண்மை, நேர்மை, சத்தியம் நடுநிலைமை எனும் அற வார்த்தைகள் இலங்கை அரசிற்கு எப்போதும் கசப்பானது. ஏமாற்றுவதிலும் உண்மையை மறைப்பதும் அதனை நீர்த்துப் போகச் செய்வதிலும் மிகப் பெரிய வல்லமையுள்ள ஆட்சியாளர்களைக் கொண்ட நாடு.

ஆகவே, இதற்கு சர்வதேச விசாரணையே பாதிக்கப்பட்ட தரப்பிற்கும் குறிப்பாக ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்குரிய நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் உலக அரங்கில் பயங்கரவாத ஒழிப்புக்கு உந்துதலாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் அமைய வேண்டும் என்பதே யதார்த்தம்.

ஆனால் பட்டவர்த்தனமாக பஞ்சமாபாதம் இனப்படுகொலை செய்தவர்கள் சரணடைந்தவர்களையே சுட்டு கொன்றவர்கள் பலரை காணாமல் ஆக்கியவர்களிடம்  அறநீதி எதிர் பாக்கலாமா?  

தான் ஒரு கத்தோலிக்கன் என்பதையே மறந்து பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறும் சிங்கள இனவாதி கர்தினால் போன்றவர்களை இலகுவாக இனவாதத்தால் சமாளிக்கும் வல்லமையோடு உண்மையை மூடி மறைப்பதிலும் நீண்ட அனுபவமுள்ள இலங்கையின் ஆட்சியாளருக்கு ஏமாற்றுவதும் பாசாங்கு காட்டி சர்வதேசத்தை நம்பவைப்பதும் சர்வ சாதாரணமே.    

எனவே தற்போதைய ஆட்சியே ஒரு திடச்சங்கு நிலையில் உள்ளதால் உள்நாட்டு விசாரணை எந்தச் சந்தர்ப்பத்திலும் உகந்தது அல்ல.கட்சி அரசியல் தேர்தல் அரசியல் கடந்து நாட்டின் எதிர்கால சந்ததியின் தொலைநோக்கு நம்பிக்கை இருப்பின் அடி நாதமாக அமைய வேண்டும்.  

திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் இவ்வாறு தாக்குதல் முயற்சிகள் நிகழா வண்ணம் நீதியான நிர்ண நிலை உருவாக்கப்பட வேண்டும். எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைகளை போல் கானல் நீராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அமைந்து விடக்கூடாது. அறத்தின் பால் நீதியை நிலை நாட்ட சர்வதேச விசாரணையே அவசியமாகும்.      என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம். அறத்தின் பால் நீதியை நிலை நாட்ட சர்வதேச விசாரணையே அவசியம்.சிவகரன் வலியுறுத்து.samugammedia காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைகளை போல் கானல் நீராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அமைந்து விடக்கூடாது.அறத்தின் பால் நீதியை நிலை நாட்ட சர்வதேச விசாரணையே அவசியமாகும் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சனல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட தகவல் என்பது ஒரு அதிர்ச்சிகரமான விடயம் இல்லை. ஏலவே அரசியல் அரங்கில் எழுப்பப்பட்ட ஐயத்திற்கான எடுகோலே. இதனை சர்வதேச நிபுணர்களைக் கொண்டு விசாரிப்பது அவசியமாகும்.கடந்த காலத்தில் உள்நாட்டு  விசாரணைகளின் அறிக்கைகள் எப்படி வெற்றுப் பத்திரமாகக்காணப்பட்டது என்பதை யாவரும் அறிவார்கள்.முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை பௌத்த தேசியவாத மேட்டிமைத்தனம் யுத்த வெற்றி வாதம் எனும் இனவாதக் கோசம் மேலெழுந்து மூடி மறைத்தது போல் இதையும் நோக்கினால் குற்றவாளியே குற்றவாளியை விசாரிக்கும் கங்காரு நீதிமன்ற முறைமை போல் அமைந்து விடும்.இந்த நாட்டில் நடுநிலையோடு நீதியை நிலை நாட்ட கூடிய  நிபுணத்துவம் உள்ளவர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கிடைத்திருக்கும்.உண்மை, நேர்மை, சத்தியம் நடுநிலைமை எனும் அற வார்த்தைகள் இலங்கை அரசிற்கு எப்போதும் கசப்பானது. ஏமாற்றுவதிலும் உண்மையை மறைப்பதும் அதனை நீர்த்துப் போகச் செய்வதிலும் மிகப் பெரிய வல்லமையுள்ள ஆட்சியாளர்களைக் கொண்ட நாடு.ஆகவே, இதற்கு சர்வதேச விசாரணையே பாதிக்கப்பட்ட தரப்பிற்கும் குறிப்பாக ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்குரிய நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் உலக அரங்கில் பயங்கரவாத ஒழிப்புக்கு உந்துதலாகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் அமைய வேண்டும் என்பதே யதார்த்தம்.ஆனால் பட்டவர்த்தனமாக பஞ்சமாபாதம் இனப்படுகொலை செய்தவர்கள் சரணடைந்தவர்களையே சுட்டு கொன்றவர்கள் பலரை காணாமல் ஆக்கியவர்களிடம்  அறநீதி எதிர் பாக்கலாமா  தான் ஒரு கத்தோலிக்கன் என்பதையே மறந்து பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறும் சிங்கள இனவாதி கர்தினால் போன்றவர்களை இலகுவாக இனவாதத்தால் சமாளிக்கும் வல்லமையோடு உண்மையை மூடி மறைப்பதிலும் நீண்ட அனுபவமுள்ள இலங்கையின் ஆட்சியாளருக்கு ஏமாற்றுவதும் பாசாங்கு காட்டி சர்வதேசத்தை நம்பவைப்பதும் சர்வ சாதாரணமே.    எனவே தற்போதைய ஆட்சியே ஒரு திடச்சங்கு நிலையில் உள்ளதால் உள்நாட்டு விசாரணை எந்தச் சந்தர்ப்பத்திலும் உகந்தது அல்ல.கட்சி அரசியல் தேர்தல் அரசியல் கடந்து நாட்டின் எதிர்கால சந்ததியின் தொலைநோக்கு நம்பிக்கை இருப்பின் அடி நாதமாக அமைய வேண்டும்.  திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் இவ்வாறு தாக்குதல் முயற்சிகள் நிகழா வண்ணம் நீதியான நிர்ண நிலை உருவாக்கப்பட வேண்டும். எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைகளை போல் கானல் நீராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அமைந்து விடக்கூடாது. அறத்தின் பால் நீதியை நிலை நாட்ட சர்வதேச விசாரணையே அவசியமாகும்.      என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement