• May 22 2024

சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு...! 41வது நாளாக தொடரும் போராட்டம்...!அதிகாரிகள் அசமந்தம்...!samugammedia

Sharmi / Sep 12th 2023, 9:31 pm
image

Advertisement

கிளிநொச்சி கிராஞ்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள பொன்னாவெளி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக 41 வது நாளாக அப்பகுதி மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை (12) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே தனியார் நிறுவனங்களால் இப்பகுதியில் அமைக்கப்பட்ட 40க்கு மேற்பட்ட கிணறுகளினாலும் குடிநீர் செயற்திட்டத்தாலும் மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுவதாகவும் தற்போது சீமெந்து தொழிற்சாலைக்காக இப்பகுதியில் சுண்ணக்கள் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் நன்னீர் உவர் நீராக மாறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் 40 நாட்களுக்கு மேலாக தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பல்வேறு பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனம் மற்றும் கிளிநொச்சி அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உட்பட பலருக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரை தங்கள் பகுதிக்கு அரச அதிகாரிகளோ அமைச்சர்களோ, கிராம  அலுவலர் யாரும் வந்து சந்திக்வோ இதுவரை தங்கள் முறைப்பாடுக்கு சாதகமான பதில் வழங்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் இன்று (12) மாலை  குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்தது டன் குறித்த போராட்டம் தொடர்பாக மக்களின் நிலைப்பாடு தொடர்பிலும் அறிந்து கொண்டனர்.

எனினும் தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு. 41வது நாளாக தொடரும் போராட்டம்.அதிகாரிகள் அசமந்தம்.samugammedia கிளிநொச்சி கிராஞ்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள பொன்னாவெளி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக 41 வது நாளாக அப்பகுதி மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை (12) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏற்கனவே தனியார் நிறுவனங்களால் இப்பகுதியில் அமைக்கப்பட்ட 40க்கு மேற்பட்ட கிணறுகளினாலும் குடிநீர் செயற்திட்டத்தாலும் மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுவதாகவும் தற்போது சீமெந்து தொழிற்சாலைக்காக இப்பகுதியில் சுண்ணக்கள் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் நன்னீர் உவர் நீராக மாறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அதே நேரம் 40 நாட்களுக்கு மேலாக தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பல்வேறு பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனம் மற்றும் கிளிநொச்சி அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உட்பட பலருக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரை தங்கள் பகுதிக்கு அரச அதிகாரிகளோ அமைச்சர்களோ, கிராம  அலுவலர் யாரும் வந்து சந்திக்வோ இதுவரை தங்கள் முறைப்பாடுக்கு சாதகமான பதில் வழங்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.இந்த நிலையில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் இன்று (12) மாலை  குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்தது டன் குறித்த போராட்டம் தொடர்பாக மக்களின் நிலைப்பாடு தொடர்பிலும் அறிந்து கொண்டனர்.எனினும் தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement