• Jul 27 2024

இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு..!

Tamil nila / May 21st 2024, 9:34 pm
image

Advertisement

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று(21) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் 2.5 சதவீதமாக காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மார்ச் மற்றும் பெப்ரவரி மாதங்களில் தொடர்ந்தும் 5 சதவீதமாகக் காணப்பட்ட உணவு பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 3.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

 மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக பதிவாகியிருந்த உணவல்லாப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது.தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று(21) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் மாதத்தில் 2.5 சதவீதமாக காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.மார்ச் மற்றும் பெப்ரவரி மாதங்களில் தொடர்ந்தும் 5 சதவீதமாகக் காணப்பட்ட உணவு பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 3.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாக பதிவாகியிருந்த உணவல்லாப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement