• Jul 27 2024

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் மரணம்

Chithra / May 28th 2024, 2:55 pm
image

Advertisement


இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழந்துள்ளார்.

ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண்ணே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திலின ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்திருந்ததுடன், அவரது மகன் துலோத் அந்தோனி சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.

இந் நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

2019 அன்று, 8 இடங்களில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 273 பேர் கொல்லப்பட்டதோடு, 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் மரணம் இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழந்துள்ளார்.ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண்ணே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.திலின ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்திருந்ததுடன், அவரது மகன் துலோத் அந்தோனி சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.இந் நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.2019 அன்று, 8 இடங்களில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 273 பேர் கொல்லப்பட்டதோடு, 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement