கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவுக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் (GMOA) இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலானது நேற்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் மருத்துவ சங்கத்தினர் எடுத்துக் கூறினர்.
இவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்த ஆளுநர், வைத்திய சேவையை உயர் தரத்தில் மக்களுக்கு கொண்டு செல்வதற்கும், சுகாதாரத் துறையினரின் நலன்களை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆளுநர் கூறினார்.
இதன் போது, ஜப்பானிய உதவியின் கீழ் UNICEF ஊடாக சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட லொறி ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி. ஏ. சி. என். தலங்கம, ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க, மாகாண சுகாதார சேேவைகள் பணிப்பாளர் டாக்டர் டி.ஜி.எம். கொஸ்தாா மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவுக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் (GMOA) இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலானது நேற்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் மருத்துவ சங்கத்தினர் எடுத்துக் கூறினர்.இவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்த ஆளுநர், வைத்திய சேவையை உயர் தரத்தில் மக்களுக்கு கொண்டு செல்வதற்கும், சுகாதாரத் துறையினரின் நலன்களை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆளுநர் கூறினார்.இதன் போது, ஜப்பானிய உதவியின் கீழ் UNICEF ஊடாக சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட லொறி ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி. ஏ. சி. என். தலங்கம, ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க, மாகாண சுகாதார சேேவைகள் பணிப்பாளர் டாக்டர் டி.ஜி.எம். கொஸ்தாா மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.