• Sep 21 2024

கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் -செல்வம் எம்.பி கோரிக்கை! samugammedia

Tamil nila / May 6th 2023, 7:01 pm
image

Advertisement

கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என செல்வம் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்  கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ,ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  கட்டமைப்போடு செயற்படும்  நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள யாப்பானது திருத்தங்களுடன் எதிர்வரும் கூட்டங்களில் முன்வைக்கப்படவுள்ளது.

அத்துடன் 11ம்  12ம்  13ம்  திகதிகளில் வடக்கு தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை  ஜனாதிபதி அழைத்து அதிகாரப்பரவலாக்கல் , வடக்கிலுள்ள பிரச்சரனைகள்  மற்றும் அபிவிருத்தி சம்பந்தமாக  கலந்துரையாட அழைப்பு விடுத்துள்ளார்

தாயகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் கருதப்படுவதால் அதிகாரப்பரவல் வடக்கு கிழக்கைச் சார்ந்தது.  அந்த வகையில்  கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும்

கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படாதவிடத்து  குறித்த பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக எதிர்பார்த்துள்ளோம்.

இதேவேளை கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டுமென பிரதான கோரிக்கையை  ஜனாதிபதியிடம் முன்வைக்கின்றோம். என்றார்.

கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் -செல்வம் எம்.பி கோரிக்கை samugammedia கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என செல்வம் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்  கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ,ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  கட்டமைப்போடு செயற்படும்  நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள யாப்பானது திருத்தங்களுடன் எதிர்வரும் கூட்டங்களில் முன்வைக்கப்படவுள்ளது.அத்துடன் 11ம்  12ம்  13ம்  திகதிகளில் வடக்கு தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை  ஜனாதிபதி அழைத்து அதிகாரப்பரவலாக்கல் , வடக்கிலுள்ள பிரச்சரனைகள்  மற்றும் அபிவிருத்தி சம்பந்தமாக  கலந்துரையாட அழைப்பு விடுத்துள்ளார்தாயகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் கருதப்படுவதால் அதிகாரப்பரவல் வடக்கு கிழக்கைச் சார்ந்தது.  அந்த வகையில்  கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும்கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படாதவிடத்து  குறித்த பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக எதிர்பார்த்துள்ளோம்.இதேவேளை கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டுமென பிரதான கோரிக்கையை  ஜனாதிபதியிடம் முன்வைக்கின்றோம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement