• Nov 19 2024

அரகலய போராட்டத்தின் எதிரொலி; தேர்தலுக்கு முன் துப்பாக்கிகளை வாங்கி குவித்த எம்.பிக்கள்

Chithra / Sep 11th 2024, 12:48 pm
image


ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் பத்து பேரைத் தவிர மற்ற அனைவரும் அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து தலா இரண்டு ரிப்பீட்டர் ஷொட் துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு எம்.பி.க்கும் இரண்டு ரிப்பீட்டர் துப்பாக்கிகள் வேண்டும் என்ற கோரிக்கை சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு பாராளுமன்ற அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டது.

பத்து எம்.பி.க்கள் தவிர, அனைத்து எம்.பி.க்களும் தேவையான பணம் செலுத்தி அவற்றை பெற்று விட்டனர் என பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட வட்டாரம் தெரிவிதுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தற்போது செயலிழந்த நிலையில் உள்ளன, எனவே ரிப்பீட்டர் துப்பாக்கிகளை வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

இதுபோன்ற துப்பாக்கிகளை எந்த மூன்றாம் தரப்பினருக்கும் மாற்ற முடியாது என்று பாதுகாப்பு அமைச்சகம் நிபந்தனை விதித்துள்ளது. 

மே மாதம் 9 ஆம் திகதி அரகலய ஆர்ப்பாட்டத்தின் உச்சக்கட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரகலய உறுப்பினர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

மேலும், 72 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட நூலகமும் எரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அரகலய போராட்டத்தின் எதிரொலி; தேர்தலுக்கு முன் துப்பாக்கிகளை வாங்கி குவித்த எம்.பிக்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் பத்து பேரைத் தவிர மற்ற அனைவரும் அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து தலா இரண்டு ரிப்பீட்டர் ஷொட் துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு எம்.பி.க்கும் இரண்டு ரிப்பீட்டர் துப்பாக்கிகள் வேண்டும் என்ற கோரிக்கை சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு பாராளுமன்ற அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டது.பத்து எம்.பி.க்கள் தவிர, அனைத்து எம்.பி.க்களும் தேவையான பணம் செலுத்தி அவற்றை பெற்று விட்டனர் என பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட வட்டாரம் தெரிவிதுள்ளது.சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தற்போது செயலிழந்த நிலையில் உள்ளன, எனவே ரிப்பீட்டர் துப்பாக்கிகளை வழங்க முடிவு எடுக்கப்பட்டது.இதுபோன்ற துப்பாக்கிகளை எந்த மூன்றாம் தரப்பினருக்கும் மாற்ற முடியாது என்று பாதுகாப்பு அமைச்சகம் நிபந்தனை விதித்துள்ளது. மே மாதம் 9 ஆம் திகதி அரகலய ஆர்ப்பாட்டத்தின் உச்சக்கட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரகலய உறுப்பினர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.மேலும், 72 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட நூலகமும் எரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement