நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மார்ச் மாத நாணயக் கொள்கை விளக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் இரண்டு காலாண்டுகளில் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும்,
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட பொருளாதார வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 1.6 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த பொருளாதார வளர்ச்சிப் போக்கு எதிர்வரும் காலாண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் தொடரும் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மார்ச் மாத நாணயக் கொள்கை விளக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு முதல் இரண்டு காலாண்டுகளில் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட பொருளாதார வளர்ச்சியானது 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 1.6 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.இந்த பொருளாதார வளர்ச்சிப் போக்கு எதிர்வரும் காலாண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.