கல்வியே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் விடுதலைப் பயணத்திற்கும் முக்கிய அடித்தளமாக இருப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி பகுதியில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
எமது இனத்தின் விடுதலைப் பயணமும், வாழ்வுரிமைக்கான போராட்டமும் எப்போதும் கல்வியை முதன்மை ஆயுதமாகக் கொண்டு நகர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எத்தனையோ இழப்புகள் மற்றும் சவால்களை கடந்துள்ள சமூகம் இன்று முன்னேறி நிற்கவும், எதிர்காலத்தில் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கவும் மாணவர்களின் கல்வி அறிவே முக்கிய காரணம்.
புலமைப்பரிசில் வெற்றி என்பது வெறும் கல்வி சாதனை மட்டுமல்லாது, இனத்தின் எதிர்கால பாதுகாப்புக்கும் அறிவுசார் விடுதலைக்கும் முதல் படியாகும் .
வரலாற்றில் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க துப்பாக்கிகளை விட பேனா முனைகளுக்கே அதிக வலிமை உண்டு என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
மாணவர்கள் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் இனத்தின் விடுதலைப் பயணத்திற்கு சேர்க்கப்படும் பலமாகும் என்றும், சவால்களுக்கு அஞ்சாமல் கல்வி தேடலை தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வு உருத்திரபுரம் மக்கள் ஒன்றியம் (கனடா) ஏற்பாட்டில் நடைபெற்றது. கிளி/ சிவநகர் அ.த.க பாடசாலை உட்பட ஆறு பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு இந்த மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.
கிளி/ சிவநகர் அ.த.க பாடசாலை பிரதான மண்டபத்தில் 2026 மே 23ஆம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாடசாலை முதல்வர் திருமதி சிவதர்சினி கிருசாந்தன் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மருத்துவர் திரு சிவஞானசுந்தரம் வாகீசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
அத்துடன் அன்னையின் கரங்கள் அமைப்பின் நிறுவனர் திருமதி அன்னலட்சுமி ஏரம்பு மற்றும் சிவநகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு இராஜேஸ்வரநாதன் திலக்சன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
கல்வியே எமது இனத்தின் முதன்மை ஆயுதம் : நாளைய தலைமுறைக்கு சிறீதரன் எம்.பி வலியுறுத்தல் கல்வியே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் விடுதலைப் பயணத்திற்கும் முக்கிய அடித்தளமாக இருப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.கிளிநொச்சி பகுதியில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.எமது இனத்தின் விடுதலைப் பயணமும், வாழ்வுரிமைக்கான போராட்டமும் எப்போதும் கல்வியை முதன்மை ஆயுதமாகக் கொண்டு நகர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.மேலும் அவர் தெரிவிக்கையில், எத்தனையோ இழப்புகள் மற்றும் சவால்களை கடந்துள்ள சமூகம் இன்று முன்னேறி நிற்கவும், எதிர்காலத்தில் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கவும் மாணவர்களின் கல்வி அறிவே முக்கிய காரணம்.புலமைப்பரிசில் வெற்றி என்பது வெறும் கல்வி சாதனை மட்டுமல்லாது, இனத்தின் எதிர்கால பாதுகாப்புக்கும் அறிவுசார் விடுதலைக்கும் முதல் படியாகும் .வரலாற்றில் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க துப்பாக்கிகளை விட பேனா முனைகளுக்கே அதிக வலிமை உண்டு என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.மாணவர்கள் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் இனத்தின் விடுதலைப் பயணத்திற்கு சேர்க்கப்படும் பலமாகும் என்றும், சவால்களுக்கு அஞ்சாமல் கல்வி தேடலை தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்வு உருத்திரபுரம் மக்கள் ஒன்றியம் (கனடா) ஏற்பாட்டில் நடைபெற்றது. கிளி/ சிவநகர் அ.த.க பாடசாலை உட்பட ஆறு பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு இந்த மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.கிளி/ சிவநகர் அ.த.க பாடசாலை பிரதான மண்டபத்தில் 2026 மே 23ஆம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாடசாலை முதல்வர் திருமதி சிவதர்சினி கிருசாந்தன் தலைமை தாங்கினார்.நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மருத்துவர் திரு சிவஞானசுந்தரம் வாகீசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.அத்துடன் அன்னையின் கரங்கள் அமைப்பின் நிறுவனர் திருமதி அன்னலட்சுமி ஏரம்பு மற்றும் சிவநகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு இராஜேஸ்வரநாதன் திலக்சன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.