• Nov 21 2024

பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு...!

Sharmi / Jun 17th 2024, 10:33 am
image

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கணிதம்,ஆங்கிலம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், தமிழ் ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

எனவே,ஆசிரியர்கள் இதற்குத் தயாராக வேண்டும் எனவும், ஆசிரியர் பயிற்சி தொடர்பான ஆசிரியர் கையேடு நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பச் சுற்றில் 7500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு. எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,கணிதம்,ஆங்கிலம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், தமிழ் ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.அதேவேளை, மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.எனவே,ஆசிரியர்கள் இதற்குத் தயாராக வேண்டும் எனவும், ஆசிரியர் பயிற்சி தொடர்பான ஆசிரியர் கையேடு நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பச் சுற்றில் 7500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement