ஈழத்தின் முது பெரும் கவிஞரும், எழுத்தாளருமான மு.பொன்னம்பலம்(மு. பொ) இன்று அதிகாலை(07) கொழும்பில் காலமானார்.
யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமது பன்னிரண்டாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கியவர், சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விவாதங்கள் ஆகிய துறைகளில் ஈடுபட்டு ஆழ்தடங்களை பதிவு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு அண்மையில் தமிழ் நிதி விருதினை வழங்கிக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவம் செய்தது.
'மு.பொ வின் இழப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று' என காரைக்கவி கந்தையா பத்மானந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் மறைவு. ஈழத்தின் முது பெரும் கவிஞரும், எழுத்தாளருமான மு.பொன்னம்பலம்(மு. பொ) இன்று அதிகாலை(07) கொழும்பில் காலமானார். யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமது பன்னிரண்டாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கியவர், சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விவாதங்கள் ஆகிய துறைகளில் ஈடுபட்டு ஆழ்தடங்களை பதிவு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் அவருக்கு அண்மையில் தமிழ் நிதி விருதினை வழங்கிக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவம் செய்தது. 'மு.பொ வின் இழப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று' என காரைக்கவி கந்தையா பத்மானந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.