சந்தையில் அதிகரித்துள்ள உள்ளூர் முட்டை விலை இன்னும் இரண்டு வாரங்களில் குறையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முட்டையிடும் கோழிகளுக்குத் தேவையான விட்டமின்கள், மருந்துகள் மற்றும் கோழித் தீவனங்களின் விலை உயர்வால் முட்டை உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, முன்னர் 38 ரூபாவிற்கு உற்பத்தி செய்யப்பட்ட ஒரு முட்டை தற்போது 43 ரூபாவாக உற்பத்தி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சந்தையில் மரக்கறிகள், இறைச்சிகள், மீன்கள் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றின் விலைகள் துரிதமாக அதிகரித்துள்ளமையினால் நுகர்வோரின் முட்டை பாவனை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
மார்ச் முதல் இரண்டு வாரங்களின் பின்னர் நுகர்வோர் 50 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டையை கொள்வனவு செய்ய முடியும் எனவும் சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
இன்னும் இரண்டு வாரங்களில் முட்டை விலையில் மாற்றம். சந்தையில் அதிகரித்துள்ள உள்ளூர் முட்டை விலை இன்னும் இரண்டு வாரங்களில் குறையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.முட்டையிடும் கோழிகளுக்குத் தேவையான விட்டமின்கள், மருந்துகள் மற்றும் கோழித் தீவனங்களின் விலை உயர்வால் முட்டை உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதன்படி, முன்னர் 38 ரூபாவிற்கு உற்பத்தி செய்யப்பட்ட ஒரு முட்டை தற்போது 43 ரூபாவாக உற்பத்தி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.இதேவேளை, சந்தையில் மரக்கறிகள், இறைச்சிகள், மீன்கள் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றின் விலைகள் துரிதமாக அதிகரித்துள்ளமையினால் நுகர்வோரின் முட்டை பாவனை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.மார்ச் முதல் இரண்டு வாரங்களின் பின்னர் நுகர்வோர் 50 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டையை கொள்வனவு செய்ய முடியும் எனவும் சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.