திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்றையதினம்(30) காலை வெருகலில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளில் தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய பிரதேச சபை வெருகலாகும்.
வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 10 கிராம சேவகர் பிரிவில் 07 கிராம சேவகர் பிரிவுகள் முழுமையாக வனவிலங்கு திணைக்களத்திற்குள் காணப்படுகின்றன.இதை விடுவிக்க வேண்டியது எமது முதன்மை தேவையாக இருக்கிறது.
ஏனைய இடங்களோடு ஒப்பீடுபோது வெருகல் பின்தங்கி காணப்படுகிறது.இதனை அவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால் வெருகல் பிரதேச சபை தமிழர்களின் கையில் இருக்க வேண்டும்.
என்னால் முடிந்த சேவைகளை வெருகல் பகுதிக்கு செய்திருக்கின்றேன்.செய்தும் வருகின்றேன்.
வெருகல் பிரதேச சபையில் இளைஞர்கள், திறமையானவர்களை நிறுத்தியிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
குகதாஸன் எம்.பி தலைமையில் திருமலையில் தேர்தல் பரப்புரை. திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்றையதினம்(30) காலை வெருகலில் இடம்பெற்றது.இக் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளில் தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய பிரதேச சபை வெருகலாகும்.வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 10 கிராம சேவகர் பிரிவில் 07 கிராம சேவகர் பிரிவுகள் முழுமையாக வனவிலங்கு திணைக்களத்திற்குள் காணப்படுகின்றன.இதை விடுவிக்க வேண்டியது எமது முதன்மை தேவையாக இருக்கிறது.ஏனைய இடங்களோடு ஒப்பீடுபோது வெருகல் பின்தங்கி காணப்படுகிறது.இதனை அவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால் வெருகல் பிரதேச சபை தமிழர்களின் கையில் இருக்க வேண்டும்.என்னால் முடிந்த சேவைகளை வெருகல் பகுதிக்கு செய்திருக்கின்றேன்.செய்தும் வருகின்றேன்.வெருகல் பிரதேச சபையில் இளைஞர்கள், திறமையானவர்களை நிறுத்தியிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.