• Mar 26 2025

தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு விசேட அறிவிப்பு

Chithra / Mar 25th 2025, 1:25 pm
image


தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்கள் குறித்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும்.

அந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆணைக்குழு மறுஆய்வு செய்து இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

மேலும், அந்த திட்டங்களில் தேர்தலுக்கு தாக்கம் செலுத்தக்கூடிய சில திட்டங்கள் இருப்பின், அவற்றை தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் அமைச்சரவையால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு, ஆணைக்குழு அந்த தீர்மானங்களை மறுஆய்வு செய்து அதுதொடர்பாக அரசாங்கத்திற்கு அறிவிக்கும் நடைமுறை பாரம்பரியமாக இடம்பெற்று வருகிறது.

தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு விசேட அறிவிப்பு தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்குமாறு அரசாங்கத்திற்கு அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதன்படி, அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்கள் குறித்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும்.அந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆணைக்குழு மறுஆய்வு செய்து இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.மேலும், அந்த திட்டங்களில் தேர்தலுக்கு தாக்கம் செலுத்தக்கூடிய சில திட்டங்கள் இருப்பின், அவற்றை தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.தேர்தல் காலத்தில் அமைச்சரவையால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு, ஆணைக்குழு அந்த தீர்மானங்களை மறுஆய்வு செய்து அதுதொடர்பாக அரசாங்கத்திற்கு அறிவிக்கும் நடைமுறை பாரம்பரியமாக இடம்பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement