• Nov 14 2024

சாணக்கியனின் பிரசாரக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள்

Chithra / Nov 11th 2024, 7:46 am
image

 மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் நேற்று மாலை தமிழரசுக்கட்சி வேட்பாளர் சாணக்கியனின் பிரசாரக்கூட்டம் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் உள்ள ஆலயம் ஒன்றின் வெளி வீதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் இரா.சாணக்கியனின் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கூட்டம் மாலை 6.00 மணியளவில் தொடங்கப்படவிருந்த நிலையில் அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக தேர்தல் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரியும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான  முகுந்தன் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் குறித்த கூட்டத்தினை ஆலய வளாகத்தில் செய்ய முடியாது என நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஏற்பாட்டாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டபோதிலும் பின்னர் குறித்த கூட்டம் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டது.

குறித்த கூட்டம் தொடர்பான அனுமதிகள் பெற்ற நிலையிலும், குறித்த பகுதியில் கூட்டம் நடாத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த கூட்டமானது களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.


சாணக்கியனின் பிரசாரக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள்  மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் நேற்று மாலை தமிழரசுக்கட்சி வேட்பாளர் சாணக்கியனின் பிரசாரக்கூட்டம் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் உள்ள ஆலயம் ஒன்றின் வெளி வீதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் இரா.சாணக்கியனின் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.குறித்த கூட்டம் மாலை 6.00 மணியளவில் தொடங்கப்படவிருந்த நிலையில் அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக தேர்தல் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரியும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான  முகுந்தன் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் குறித்த கூட்டத்தினை ஆலய வளாகத்தில் செய்ய முடியாது என நிறுத்தப்பட்டுள்ளது.இதன்போது ஏற்பாட்டாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டபோதிலும் பின்னர் குறித்த கூட்டம் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டது.குறித்த கூட்டம் தொடர்பான அனுமதிகள் பெற்ற நிலையிலும், குறித்த பகுதியில் கூட்டம் நடாத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து குறித்த கூட்டமானது களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement