• Oct 15 2024

பொதுத் தேர்தல் வாக்காளர் பட்டியலை இறுவட்டாக வெளியிடும் தேர்தல்கள் ஆணைக்குழு

Chithra / Oct 14th 2024, 12:12 pm
image

Advertisement


2024 பொதுத் தேர்தல் வாக்காளர் பட்டியலை இறுவட்டு வடிவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடுகையில்,

2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இந்த இறுவட்டைப் பெற முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளர்,  பிரதிநிதி, சுயேச்சைக் குழுவின் தலைவர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆகியோரின் எழுத்துப்பூர்வ கோரிக்கையின் பேரில் இந்த இறுவட்டுகள் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 வாக்காளர் பட்டியலைக் கொண்ட இறுவட்டு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி, வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று மேலும் குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தேர்தல் வாக்காளர் பட்டியலை இறுவட்டாக வெளியிடும் தேர்தல்கள் ஆணைக்குழு 2024 பொதுத் தேர்தல் வாக்காளர் பட்டியலை இறுவட்டு வடிவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.இது குறித்து தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடுகையில்,2024 பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இந்த இறுவட்டைப் பெற முடியும்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளர்,  பிரதிநிதி, சுயேச்சைக் குழுவின் தலைவர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆகியோரின் எழுத்துப்பூர்வ கோரிக்கையின் பேரில் இந்த இறுவட்டுகள் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.2024 வாக்காளர் பட்டியலைக் கொண்ட இறுவட்டு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி, வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement