• Dec 11 2024

தேர்தல் அதிகாரிகளை நாளை கொழும்புக்கு அழைத்த தேர்தல்கள் ஆணைக்குழு!

Chithra / Nov 4th 2024, 1:18 pm
image

 

நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையாளர்களும் நாளை கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கொழும்புக்கு அழைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என தேர்தல்கஆணைக்குழு தெரிவித்துள்ளது.


தேர்தல் அதிகாரிகளை நாளை கொழும்புக்கு அழைத்த தேர்தல்கள் ஆணைக்குழு  நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையாளர்களும் நாளை கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கொழும்புக்கு அழைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என தேர்தல்கஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement