• Sep 10 2024

இலங்கை மக்களுக்கு தேர்தல் ஆணையாளரின் விசேட அறிவிப்பு!

Chithra / Aug 14th 2024, 1:28 pm
image

Advertisement


மாற்றுத்திறனாளிகள் தமக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை,   வாகன அனுமதிப்பத்திரம் அல்லது  கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதியம் பெறுபவரின் அடையாள அட்டை, 

இது எதுவுமே இல்லாதவர்கள் தங்கள் கிராம அலுவலருடன் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம், 

இம்முறை தற்காலிக அடையாள அட்டையை வழங்கியுள்ளோம். ஊனமுற்ற சமூகம் அவர்களுடைய  தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்த முடியும்  என்றும் குறிப்பிட்டார்.  


இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய மேலும் 42 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

அவற்றில் தேர்தல் சட்டம் மீறல் தொடர்பான 37 முறைப்பாடுகள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று வரை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 408 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. 

அவற்றில் பெரும்பாலானவை தேர்தல் சட்டம் மீறல் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு தேர்தல் ஆணையாளரின் விசேட அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் தமக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை,   வாகன அனுமதிப்பத்திரம் அல்லது  கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதியம் பெறுபவரின் அடையாள அட்டை, இது எதுவுமே இல்லாதவர்கள் தங்கள் கிராம அலுவலருடன் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம், இம்முறை தற்காலிக அடையாள அட்டையை வழங்கியுள்ளோம். ஊனமுற்ற சமூகம் அவர்களுடைய  தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்த முடியும்  என்றும் குறிப்பிட்டார்.  இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய மேலும் 42 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  அவற்றில் தேர்தல் சட்டம் மீறல் தொடர்பான 37 முறைப்பாடுகள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று வரை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 408 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தேர்தல் சட்டம் மீறல் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement