எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்குகிறது.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, 2025 மார்ச் 20 முதல் தேசிய தேர்தல் ஆணையகம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் மையத்தில் மொத்தம் 2,843 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் சட்டங்களை மீறியதாக 191 சம்பவங்களும்,
தேர்தல் தொடர்பான 29 பிற முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மூவாயிரத்தை நெருங்கும் தேர்தல் முறைப்பாடுகள் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்குகிறது.தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, 2025 மார்ச் 20 முதல் தேசிய தேர்தல் ஆணையகம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் மையத்தில் மொத்தம் 2,843 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அதேநேரம், கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் சட்டங்களை மீறியதாக 191 சம்பவங்களும், தேர்தல் தொடர்பான 29 பிற முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.