• Nov 28 2024

தனியார் துறையினருக்கும் வாக்களிக்க விசேட விடுமுறை - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

Chithra / Oct 10th 2024, 2:31 pm
image

 ஒக்டோபர் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்க தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த முடிவு உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் கழிக்கப்படாமல் அல்லது அவர்களின் தனிப்பட்ட விடுப்பைப் பயன்படுத்தாமலோ வாக்களிக்க நேரம் கொடுக்கப்படுவதை உறுதி செய்கிறது.

அரச ஊழியர்களுக்கு ஏற்கனவே அத்தகைய விடுமுறைக்கு உரிமை உண்டு. 

எவ்வாறாயினும், கடந்த தேர்தல்களின் போது தனியார் துறை ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் வந்ததால், தனியார் துறை ஊழியர்களுக்கும் இதேபோன்ற ஏற்பாடுகளை வழங்க ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. 

தனியார் துறையினருக்கும் வாக்களிக்க விசேட விடுமுறை - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு  ஒக்டோபர் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்க தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இந்த முடிவு உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் கழிக்கப்படாமல் அல்லது அவர்களின் தனிப்பட்ட விடுப்பைப் பயன்படுத்தாமலோ வாக்களிக்க நேரம் கொடுக்கப்படுவதை உறுதி செய்கிறது.அரச ஊழியர்களுக்கு ஏற்கனவே அத்தகைய விடுமுறைக்கு உரிமை உண்டு. எவ்வாறாயினும், கடந்த தேர்தல்களின் போது தனியார் துறை ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் வந்ததால், தனியார் துறை ஊழியர்களுக்கும் இதேபோன்ற ஏற்பாடுகளை வழங்க ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement