மக்கள் ஆணை பெற்ற ஜனநாயக ஆட்சி நாட்டில் நடைபெற வேண்டுமாக இருந்தால் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் - விசுவமடு பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு கடிதங்களை பொது அமைப்புக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், சந்திப்பும் இன்று பிற்பகல் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்பு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், 2019ம் ஆண்டு நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதி ஒருவர் பதவியேற்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலும் நடாத்தப்பட வேண்டும். காரணம் நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.தற்போது மக்களிடம் ஆணையைப் பெற்று நாட்டை வழிநடாத்த வேண்டும். அதனை மக்கள் ஆணை மூலம் கொண்டு செல்வதுதான் ஜனநாயகம் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் ஆணை பெற்ற ஜனநாயக ஆட்சி நாட்டில் நடைபெற வேண்டுமாக இருந்தால் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் - சாள்ஸ் எம்.பி தெரிவிப்பு. மக்கள் ஆணை பெற்ற ஜனநாயக ஆட்சி நாட்டில் நடைபெற வேண்டுமாக இருந்தால் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் - விசுவமடு பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு கடிதங்களை பொது அமைப்புக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், சந்திப்பும் இன்று பிற்பகல் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்பு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில், 2019ம் ஆண்டு நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதி ஒருவர் பதவியேற்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலும் நடாத்தப்பட வேண்டும். காரணம் நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.தற்போது மக்களிடம் ஆணையைப் பெற்று நாட்டை வழிநடாத்த வேண்டும். அதனை மக்கள் ஆணை மூலம் கொண்டு செல்வதுதான் ஜனநாயகம் எனவும் அவர் தெரிவித்தார்.