• Feb 08 2025

யாழில் முக்கிய பகுதியில் முறிந்து விழும் அபாயத்தில் மின் கம்பம்! ஆபத்தில் மக்கள்

Chithra / Feb 8th 2025, 12:58 pm
image


யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மின் கம்பம் ஒன்று முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

குறித்த மின் கம்பமானது வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று, வடக்கு மாமுனை பிரதான வீதியில் மூன்று வீதிகள் இணைக்கும் பகுதியில் நீண்ட காலமாக விழும் அபாயத்தில் உள்ளது.

இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு தகவலை அறிவித்தபோது கிராம உத்தியோகத்தர் மின்சார சபைக்கு அறிவிப்பதாக கூறி புகைப்படம் எடுத்து சென்று இரண்டு வாரங்கள் கடந்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை 

குறித்த மின் கம்பமானது முறிந்து விழுந்தால் அக் கிராம பகுதியில் பல சொத்துக்கள் உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன 

இது தொடர்பாக பொறுப்புக்குரிய உத்தியோகத்தர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.


யாழில் முக்கிய பகுதியில் முறிந்து விழும் அபாயத்தில் மின் கம்பம் ஆபத்தில் மக்கள் யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மின் கம்பம் ஒன்று முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது.குறித்த மின் கம்பமானது வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று, வடக்கு மாமுனை பிரதான வீதியில் மூன்று வீதிகள் இணைக்கும் பகுதியில் நீண்ட காலமாக விழும் அபாயத்தில் உள்ளது.இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு தகவலை அறிவித்தபோது கிராம உத்தியோகத்தர் மின்சார சபைக்கு அறிவிப்பதாக கூறி புகைப்படம் எடுத்து சென்று இரண்டு வாரங்கள் கடந்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை குறித்த மின் கம்பமானது முறிந்து விழுந்தால் அக் கிராம பகுதியில் பல சொத்துக்கள் உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன இது தொடர்பாக பொறுப்புக்குரிய உத்தியோகத்தர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement