• Jan 07 2025

மின்கட்டணத்தை 25 சதவீதத்திலேனும் குறைக்க வேண்டும்! அரசிடம் தேரர் கோரிக்கை

Chithra / Jan 5th 2025, 8:17 am
image

 

மின்சார சபை இலாபமடைந்துள்ள நிலையில் இம்முறை மின்கட்டணத்தை குறைந்தபட்சம் 25 சதவீதத்திலேனும் குறைக்க வேண்டும் என தேசிய மக்களவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

மின் பாவனையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (04) கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், 

செல்வந்த தரப்பினரின் 35 பில்லியன் ரூபா மின்கட்டணம் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மின்கட்டணத்தை அதிகரித்து நடுத்தர மக்களை பழிவாங்குவது முறையற்றதொரு செயற்படாகும்.

எனவே மின்சார சபை இலாபமடைந்துள்ள நிலையில் இம்முறை மின்கட்டணத்தை குறைந்தபட்சம் 25 சதவீதத்திலேனும் குறைக்க வேண்டும் என கூறியுள்ளார். 

மின்கட்டணத்தை 25 சதவீதத்திலேனும் குறைக்க வேண்டும் அரசிடம் தேரர் கோரிக்கை  மின்சார சபை இலாபமடைந்துள்ள நிலையில் இம்முறை மின்கட்டணத்தை குறைந்தபட்சம் 25 சதவீதத்திலேனும் குறைக்க வேண்டும் என தேசிய மக்களவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.மின் பாவனையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (04) கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கூறுகையில், செல்வந்த தரப்பினரின் 35 பில்லியன் ரூபா மின்கட்டணம் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் மின்கட்டணத்தை அதிகரித்து நடுத்தர மக்களை பழிவாங்குவது முறையற்றதொரு செயற்படாகும்.எனவே மின்சார சபை இலாபமடைந்துள்ள நிலையில் இம்முறை மின்கட்டணத்தை குறைந்தபட்சம் 25 சதவீதத்திலேனும் குறைக்க வேண்டும் என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement