• May 20 2024

இருளில் மூழ்கவுள்ள அரச வைத்தியசாலைகள்..! எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார சபை! samugammedia

Chithra / Jul 12th 2023, 11:32 am
image

Advertisement

இரத்தினபுரி போதனா பொது வைத்தியசாலை, எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலை மற்றும் தெலிகம மாவட்ட வைத்தியசாலைகளின் நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணங்களை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தாவிட்டால் அவற்றில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

இந்த வைத்தியசாலைகள் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. 

இரத்தினபுரி பொது வைத்தியசாலை ஆரம்பத்தில் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது, பின்னர் எம்பிலிப்பிட்டிய மற்றும் தெலிகம மாவட்ட வைத்தியசாலை, சப்ரகமுவ மாகாண சபையின் கட்டுப்பாட்டிலிருந்து மத்திய அரசாங்கத்திடம் கையகப்படுத்தப்பட்டது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் நிறுவப்பட்ட பின்னர், இரத்தினபுரி பொது வைத்தியசாலையானது போதனா பொது வைத்தியசாலையாக மாறியது.

இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு ஆறு மின்சாரக் கணக்கு இலக்கங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், அந்த ஆறு மீற்றர்களுக்கும் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும் மின்சார சபை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருளில் மூழ்கவுள்ள அரச வைத்தியசாலைகள். எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார சபை samugammedia இரத்தினபுரி போதனா பொது வைத்தியசாலை, எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலை மற்றும் தெலிகம மாவட்ட வைத்தியசாலைகளின் நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணங்களை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தாவிட்டால் அவற்றில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.இந்த வைத்தியசாலைகள் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இரத்தினபுரி பொது வைத்தியசாலை ஆரம்பத்தில் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது, பின்னர் எம்பிலிப்பிட்டிய மற்றும் தெலிகம மாவட்ட வைத்தியசாலை, சப்ரகமுவ மாகாண சபையின் கட்டுப்பாட்டிலிருந்து மத்திய அரசாங்கத்திடம் கையகப்படுத்தப்பட்டது.சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் நிறுவப்பட்ட பின்னர், இரத்தினபுரி பொது வைத்தியசாலையானது போதனா பொது வைத்தியசாலையாக மாறியது.இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு ஆறு மின்சாரக் கணக்கு இலக்கங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், அந்த ஆறு மீற்றர்களுக்கும் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும் மின்சார சபை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement